மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இரு சக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபடும் திருடர்களை சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் அவ்வப்போது ஒரு சில திருடர்களை பிடித்து வந்தாலும், காவல்துறையினர்களுக்கு தண்ணிக்காட்டும் விதமாக பல திருடர்கள் இன்னும் சிக்கியபாடு இல்லை.
இந்நிலையில், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் எதிரில் உள்ள ஒரு தெருவில் ஒருவர் தனது டிவிஎஸ் XL இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவசரத்தில் பைக் சாவியை எடுக்காமல் வீட்டின் உள்ளே சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வெளியே வந்து பார்த்த அவருக்கு தனது பைக் காணமால் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து தெருவில் ஒரு வீட்டில் பொறுத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தெருவில் ஒவ்வொரு வீடாக உள்ளே புகுந்தது வீட்டின் வாயில் பகுதியில் உள்ளே புகுந்தது வெளியே வருவதும்,
Group 4 Exam: குரூப் 4 தேர்வில் புதிய முறைகேடு?- டிஎன்பிஎஸ்சி மீண்டும் விளக்கம்
தொடர்ந்து வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அங்கிருந்து லாவகமாக தள்ளி சென்று சிறிது தூரத்தில் வைத்து ஓட்டி சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வாகனம் திருடி செல்லும் பகுதியை நோக்கி வேறோரு வானத்தில் துரத்தி சென்று சுமார் 6 கிலோமீட்டருக்கு அப்பால் சீர்காழியில் பைக்கில் பெட்ரோல் இன்றி பாதியில் நின்று திருடனை மடக்கி பிடித்து அவனிடம் விசாரணை செய்ததில் அவன் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு பகுதியை சேர்ந்த 45 வயதான ரவி என்பது அவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் அங்க கூடியதை அடுத்து உங்கள் வீட்டு பிள்ளையா நினைந்து என்னை மன்னித்து விடுங்கள் என ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கூறுவதை போன்று
ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள் இனி திருட மாட்டேன் என்றும், என்னை தயவு செய்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு விட்டுவிடுங்கள் சொன்னால் கேளுங்க போலீஸிடம் ஒப்படைத்தால் 10 கேஷ் போடுவாங்க அதனால் விட்டுவிடுங்கள் இன்னொரு முறை இந்த பக்கம் வந்தால் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூற காவல்துறையில் ஒப்படைக்க காரில் ஏற்றிய பொதுமக்கள் அவரின் நகைச்சுவையான பேச்சை கேட்டு மன்னித்து அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
Crime : ’தம்பி கூட சண்டை.. ‘ : ஆத்திரத்தில் செல்போனை விழுங்கிய பெண்.. மருத்துவர்கள் ஷாக்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்