Crime : மத்திய பிரதேசத்தில் சகோதரருடன் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் பிந்த என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பி உள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சிறுபிள்ளைத்தனமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அந்த இளம்பெண்ணுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.


இதனால் அந்த பெண் கையில் வைத்திருந்த செல்போனை உடனே விழுங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு வாந்தியும், வயிற்றுவலியும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த தகவலை அறிந்த அவரின் குடும்பத்தார், உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அறுவை சிகிச்சை செய்தால்தான் செல்போனை வெளியே எடுக்க முடியும் என்று கூறினார்.


இதனை அடுத்து, இளம்பெண் செல்போனை விழுங்கியதால் அறுவை சிகிச்சை செய்துதான் செல்போனை எடுக்க முடியும் என்று கூறியதால் அவரை குவாலியர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கையும் வேகமாக நடத்தது.


சுமார் இரண்டு மணி நேரத்தில் பிறகு மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்த செல்போனை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர். பெண்ணின் வயிற்றில் 20 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். 


இதுகுறித்து பேசிய மருத்துவர்கள் குழு, ”பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி ஏற்பட்டதால் அவரின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அல்ட்ரசவுண்ட், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட முழுமையான பரிசோதனையை மேற்கொண்ட பிறகு எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்றவைகள் மூலம் செல்போனை அகற்ற முடியாது என்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.


மருத்துவர் பிரசாந்த் ஸ்ரீவஸ்தா, மருத்துவர் பிரசாந்த  பிபாரியா  உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேர அறுவை சிகிக்சைக்கு பிறகு செல்போன் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. தற்போது பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மேலும், தங்கள் 20 ஆண்டுகால மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை சந்தித்ததே இல்லை. சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டது திருப்தி அளிப்பதாகவும் கூறினர். விரைவில் பெண் வீடு திரும்புவார்” என்று மருத்துவர்கள் கூறினர்.




மேலும் படிக்க


Twitter Logo: “வேற வேலையே இல்லையா.." : மீண்டும் மாற்றப்பட்ட ட்விட்டர் லோகோ... கடுப்பான ட்விட்டர்வாசிகள்..