மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோசலை தெருவை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி ராஜேந்திரன். இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அனுமதி அளித்துள்ளார்.  




ஆனால் மணலுக்கான முழு தொகையும் வழங்காமல் கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் மணல் எடுக்க வந்த டிராக்டர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்திரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் சுயநினைவிழந்து ராஜேந்திரன் கீழே விழுந்து அசைவற்று கிடந்துள்ளார்.


CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலாகும் போலி அறிக்கை: ப்ளீஸ் நம்பாதீங்க!




இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு. அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து உறவினர்கள்   திருவெண்காடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 


TN Headlines Today: பிளஸ்-2 மாணவர்களை சந்திக்கும் விஜய்.. அண்ணாமலை மீது வழக்குப் போட்ட முதல்வர்..சுடச்சுட 3 மணி செய்திகள்..!




தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த திருவெண்காடு காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விவசாயை அடித்து கொலை செய்து விட்டு டிராக்டரை மேலை ஏற்றி விபத்து என மாற்றிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Viduthali Sigappi: பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன்! நிபந்தனை இதுதான்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண