சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று போலி அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.


சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது.


குறிப்பாக 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற்றன. செய்முறை தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. 


38 லட்சம் பேர் எழுதிய தேர்வு


இந்தத் தேர்வை சுமார் 38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாநிலக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின.


 


தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத்தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி எழுந்தது. 


இதற்கிடையே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று போலி அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.



சிபிஎஸ்இ விளக்கம்


இதை மறுத்துள்ள சிபிஎஸ்இ,  இந்த அறிக்கை போலி என்று அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ தளத்தை மட்டுமே பார்க்க வேண்டாம் என்று கேட்டக்கொள்ளப் படுகிறார்கள்.


இதற்கிடையே தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று காணலாம்.


காண்பது எப்படி? 


* மாணவர்கள் cbse.gov.inresults.cbse.nic.in ஆகிய இணைப்பில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்யவும். 


* அதில் தோன்றும் ரிசல்ட் பக்கத்துக்கான இணைப்பை க்ளிக் செய்யவும்.


* நுழைவுச் சீட்டு, பிற தகவல்களைக் கையில் தயாராக வைத்துக் கொள்ளவும். 


இதையும் வாசிக்கலாம்: 12th Supplementary Exam 2023: பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? விவரம் இதோ!