அவுட் ஆகி வெளியே செல்லும்போது இருமிக்கொண்டே சென்ற தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட வாந்தி எடுப்பது போல காணப்பட்ட நிலையில் அவருடைய உடல்நலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் 2023
நடப்பு ஐபிஎல் 2023 இல் கிரிக்கெட்டை தாண்டிய பல விஷயங்கள் பல நடந்தது வருகின்றன. சீனியர் வீரர்களுடனான சண்டை, கடைசி பால் thrilling வெற்றிகள், நோ பால் திருப்பு முனைகள் என பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில் வீரர்களின் உடல்நலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடும்போது, மைதானத்தில் ஏராளமான விஷயங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை. அதில் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் பல இருக்கும். அதில் ஒரு சீரியசான விஷயம் நேற்று நடந்த நிலையில் பார்வையாளர்கள் சற்று பரபரப்படைந்தனர்.
ஆர்சிபி அணி பேட்டிங்
நடந்து வரும் ஐபிஎல் 2023ல், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான மோதலின் போது. முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 199/6 என்று ரன் குவித்தது. ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு, RCB அணிக் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் அற்புதமான அரைசதங்கள் அணியை மீட்டெடுத்தது. ஒரு கட்டத்தில், 14 ஓவர்கள் முடிவில் RCB 145/4 என்று இருந்தது.
அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்
ஷார்ட் ஃபைன் லெக் பகுதியில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்த டு பிளெசிஸ் வெளியேறிய பிறகு தினேஷ் கார்த்திக் வந்தார். ஆர்சிபி அணி தங்கள் ரன் விகிதத்தை விரைவுபடுத்த வேண்டிய நேரத்தில், கார்த்திக் தனது பேட்டிங் திறமையை காட்டினார். இந்த தொடரில் பெரிதாக எதுவும் செய்யாத அவர், நேற்றைய போட்டியில் சிறப்பாக கம்பேக் கொடுத்தார். கார்த்திகேயா வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள் குவித்து, அணி 180 ரன்களைக் கடக்க உதவினார்.
வாந்தி எடுத்தாரா?
பேட்டிங் செய்யும்போது நன்றாக இருப்பதுபோல இருந்த அவர் கிறிஸ் ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறி செல்கையில், உடல்நிலை சரியில்லாமல் ஆனார். பெவிலியன் போஸ்டுக்கு திரும்பும் வழியெங்கும் இருமிக்கொண்டே சென்ற அவர் கிட்டத்தட்ட வாந்தி எடுப்பது பொல் காணப்பட்டார். இதன்காரணமாக அவர் RCB அணி பீல்டிங் செய்யும்போது கீப்பிங் செய்ய வரவில்லை.
இருப்பினும் பேட்டிங்கை பொருத்தவரை அவர் அவருக்கு தரப்பட்ட ஃபினிஷிங் ரோலுக்கு ஏற்றவாறு ஃபார்முடன் திரும்பினார். 18 பந்துகளில் பரபரப்பாக ஆடிய அவர் 30 ரன்களை குவித்தார். அவரது பேட்டிங்கின்போது, தினேஷ் கார்த்திக் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.