சீர்காழி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிரியர் வீட்டில் கொள்ளை


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்தவர் 58 வயதான ஆசிரியர் திருமாறன். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஊர் திரும்பிய அவர் வீட்டை திறக்க முற்பட்டபோது காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த திருமாறன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த மரத்தால் ஆன பீரோ மற்றும் இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கலைந்து, சிதறி கிடந்ததுள்ளது.


crime: கிரிவலப் பாதையில் ஒரே மாதத்தில் 19 பைக் திருட்டு - பலே திருடர்கள் சிக்கியது எப்படி.?




காவல்துறையினர் விசாரணை


மேலும் பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து இது குறித்த சீர்காழி காவல் நிலையத்தில் திருமாறன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற இடத்தில் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மேலும் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


விபத்துக்குள்ளாகி சாலையில் நின்ற கார் - சக்கரங்களை களவாடி சென்ற திருடர்கள்




பொதுமக்கள் கோரிக்கை


இந்நிலையில் சீர்காழியில் அவ்வப்போது இது போன்று வீடுகளை குறிவைத்து கொள்ளை நடைபெறுவது தொடர் கதையாக இருந்துவருவதும், கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் பிடிபடாமல் இருந்துவருவதும் சீர்காழி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீர்காழி நகரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில்  தொடர்ந்து ஈடுபட மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. திருமாறனின் எதிர்வீட்டான ஹரிபிரசாந்து என்பவரது வீட்டிலும் திருடர்கள் திருட முயற்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு