ரஜினிகாந்த்


 நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். த.செ ஞானவேல்  இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைத்து சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வரும் ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


படமாகும் ரஜினியின் வாழ்க்கை வரலாறு 


கே.பாலச்சந்தர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த், இந்திய மொழிகள் தவிர்த்து ஜப்பான் உட்பட உலக நாடுகளில் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் அவர் படங்களை கொண்டாடி மகிழ்கிறார்கள். இத்தனை ரசிகர்களின் மனதை வென்ற ரஜினியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உருவாக இருக்கிறது. முன்னணி பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நடியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தங்கள் தயாரிப்பில் ரஜினிகாந்த் பான் இந்திய படத்தில் நடிக்க இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார் சஜித். 






இதன் பிறகு ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக தகவல் வெளியாகியது . இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் . ரஜினியாக யார் நடிக்கப் போகிறார் என்பது தொடர்பான பல கேள்விகள் எழுந்தன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இப்படத்திற்கான முதற்கட்ட திரைக்கதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் படம் குறித்தான கூடுதல் தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப் படும் என்று தெரியவந்துள்ளது. பல்வேறு தேர்ட்ந்த நடிகர்கள் இந்தி மற்றும் தமிழில் இருந்தாலும் ரஜினியாக மக்களை  நம்ப வைப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.




மேலும் படிக்க : Karthigai Deepam: ரம்யாவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!


Behind The Song: ஒரே பாட்டால் காலியான பாடகர் டி.எம்.எஸ்.. “நான் ஒரு ராசியில்லாத ராஜா” உருவான கதை!