சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான நாகராஜ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பயிற்சி வக்கீலாக உள்ளார். இவர், தனது சக வக்கீல் பிரதீப் உள்ளிட்ட 10 நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்தார். சிறிது நேரம் மணல் பரப்பில் சுற்றி விட்டு மெரினா சர்வீஸ் சாலையில் உள்ள துரித உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
Watch Video: நேரில் பார்த்தால் காலில் விழுந்து அழுவேன்.. ஸ்ரேயா கோஷல் பற்றி உருகி பேசிய சிவாங்கி!
அப்போது, ஒரு காதல் ஜோடி மெரினா கடற்கரையில் ஆபாசமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தனர். இதை பார்த்த நாகராஜ், பொது இடத்தில் இப்படி இருக்கலாமா என்று காதல் ஜோடியிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன், தனது நண்பர்களுக்கு போன் செய்து மெரினா கடற்கரைக்கு அழைத்துள்ளார். சிறிது நேரத்தில் 2 பைக்கில் வந்த 4 பேர், வக்கீல்களிடம் யார் தகராறில் ஈடுபட்டது என்று கேட்டுள்ளனர்.
இதில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது பைக்கில் வந்த 4 பேரும். வக்கீல்கள் நாகராஜ், பிரதீப் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பீர் பாட்டிலால் தாக்கியதில் அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
'இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கொலை செய்துவிடுவோம்' என்று மிரட்டி விட்டு 4 பேரும் தப்பி விட்டனர். 2 வக்கீல்களையும் உடன் வந்த நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரது தலையிலும் தலா 5 தையல் போடப்பட்டது. சம்பவம் குறித்து நாகராஜ் மற்றும் பிரதீப் மெரினா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து மெரினா சர்வீஸ் சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
ஒரே அறையில் ஒன்றாக இருந்த மாமனார் - மருமகள்! உண்மை தெரிந்த மகனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
"என் மனைவிக்கு ஆண்குறி உள்ளது, அவள் பெண்ணே இல்லை".. உச்சநீதிமன்றத்தை அதிரவைத்த வழக்கு!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்