பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வெவ்வேறு இந்திய மொழிப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கும் ஸ்ரேயாவுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சின்னத்திரை புகழ் சிவாங்கி ஸ்ரேயாவை பற்றி நெகிழ்ந்திருக்கிறார். 


ப்ளாக் ஷீப் நேர்கானல் ஒன்றில் பேசி இருந்த சிவாங்கி, “ஸ்ரேயா கோஷலை நான் நேரில் பார்த்தால் காலில் விழுந்து அழுதுவிடுவேன். இன்றைக்கு நான் பாட்டு பாட காரணமே ஸ்ரேயாதான். நானும் உங்களைப் போல இரவு முழுவதும் ஸ்ரேயாவின் பாடல்களை கேட்பது வழக்கம். எப்படி இவ்வளவு சிறப்பாக அவர்களால் பாட முடியும் என வியந்திருக்கிறேன். ஸ்ரேயா கோஷலைப் போல யாரும் பாட முடியாது” என தெரிவித்திருக்கிறார். 


வீடியோவை காண:






'இசைப்பேரரசி' என்று போற்றப்படும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு பாடகி ஸ்ரேயா கோஷல்தான். ஆஷா போஸ்லே, லதா மங்கேஸ்கர் ஆகியோர் அளவுக்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பெங்காலி, இந்தியிலும் கலக்கி வருபவர் ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைச் சேர்ந்தவர் என்று கூறும் அளவுக்கு சிறப்பாக பாடும் திறமை உடையவர். இவருடைய அழகான பல பாடல்கள் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. பல இசையமைப்பாளர்கள் ஸ்ரேயாவை இதற்காக பாராட்டியதுண்டு. 


ஸ்ரேயா என்றவுடன் பல பாடல்கள் நினைவிற்கு வந்தாலும், “உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...” என்ற வரிகள் சட்டென நினைவுக்கு வரும் முதல் பாடல். விருதுகளை குவித்து கொண்டே இருக்கும் ஸ்ரேயாவுக்கு, புகழை தாண்டிய அன்பும் பாசமும் கொண்ட ரசிகர்களும் இங்கு நிரந்தரம்.




மேலும் படிக்க: HBD Shreya Goshal: கசிந்துருகும் குரலால் இசையாளும் பாடும் நிலா! பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண