ராஜஸ்தானில் மருமகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட மாமனார், தனது மகனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் பெஹ்ரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மருமகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட 64 வயது முதியவர் தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றார். மனைவியும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இறந்த விக்ரம் சிங் தனது தந்தை பல்வந்த் சிங்கும், மனைவி பூஜாவும் தகாத உறவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். சிங்கும் பூஜாவும் சேர்ந்து விக்ரமை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலை மின்விசிறியில் தொங்கவிட்டு தற்கொலைசெய்து கொண்டதாக திட்டம் தீட்டியுள்ளனர். விக்ரமுக்கும், பூஜாவுக்கும் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.


"பல்வந்த் சிங்குக்கும், இறந்த விக்ரம் சிங்கின் மனைவிக்கும் தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் ஒருநாள் விக்ரமிடம் பிடிபட்டனர். அவர்கள் விக்ரமைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி, பிடிபட்ட பிறகு இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்” என உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.


நடந்தது என்ன..?


இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ கடந்த மார்ச் 5ம் தேதி இரவு, பல்வந்தையும், பூஜாவையும் விக்ரம் கையும் களவுமாக பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் பிடிபடுவோம் என்ற பயத்தில் அவரைக் கொன்றனர். விக்ரமின் உடலை தற்கொலை போல் காட்ட மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டனர். மறுநாள் காலை, விக்ரமின் உடலை கீழே இழுத்து சத்தம் போட, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.


இறந்தவரின் இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ள நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது, ​​சடலத்தில் கழுத்தை நெரித்த அடையாளங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இந்த சந்தேகத்தின் அடிப்படையில், பூஜாவைக் காவலில் எடுத்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அவர்களைக் கைது செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண