கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உலக நாடுகள் ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து இந்த விவகாரத்தில் தலையிட்டு வருகின்றனர். இது குறித்து பேசி இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடும் திட்டமில்லை. மூன்றாம் உலகப்போரை தவிர்க்கவே ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாக மோதவில்லை என தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் அவர், “நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன். நேட்டோவின் கீழ் உள்ள நாடுகளை முழுமையாக பாதுகாப்போம். ஆனால், உக்ரைன் நாட்டில் ரஷ்யாவை எதிர்த்து போரிடும் திட்டமில்லை.நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் மூன்றாம் உலகப்போர்தான் இருக்கும். உலகப்போரில்தான் ரஷ்யாவை எதிர்ப்போம். அதை நாம் தடுக்க முயற்சிப்போம்” என பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இரு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான போரில், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவின் பங்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மேலும் படிக்க: Russia Ukraine War | ரஷ்யா- உக்ரைன் போருக்கு நேட்டோதான் காரணமா?- யார் இந்த நேட்டோ?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்