மேலும் அறிய

பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

சில நாட்கள் முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  மனைவி தன் கணவரை விட்டுப் பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அந்த பெண் தற்போது கம்மத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

தெலங்கானாவில் பிரிந்து சென்ற மனைவி வருவார் என பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சோக சம்பவம் கோத்தகுடம் மாவட்டம், இல்லெண்டு மண்டலத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள திலக்நகர் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கல்திராமையா கிராமத்தில் தட்லா வித்யாசாகர் என்ற 26 வயது இளைஞர் ஒருவர் மணுக்குருவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கம்மம் மாவட்டம், கரேபள்ளி மண்டலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். 

இவர்கள் திருமண வாழ்க்கை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் தம்பதியினர் தங்கள் கிராமத்தை விட்டு மணுக்குருவில் இருந்து இல்லெண்டு பகுதிக்கு வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டையிட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்தாலும் பிரச்னை குறைந்தபாடில்லை. 

இந்த நிலையில் சில நாட்கள் முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  மனைவி தன் கணவரை விட்டுப் பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அந்த பெண் தற்போது கம்மத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே அக்டோபர் 5ம் தேதி தன் மனைவி பிறந்தநாள் என்பதால் தட்லா வித்யாசாகர் அவரை செல்போனில் அழைத்து பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் வீட்டுக்கு வருமாறு அழைத்ததாகவும், அப்போது அந்த பெண் சரி என சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலை முடிந்து அப்பெண்  இலெண்டு பேருந்து நிலையத்திற்கு வருவார் என வித்யாசாகர் காத்திருந்தார். 

ஆனால் அவர் வரவே இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான வித்யாசாகர் வீட்டிற்கு திரும்பிய நிலையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனிடையே திடீரென அக்டோபர் 6ம் தேதி அதிகாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வித்யாசாகர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வித்யாசாகர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget