மேலும் அறிய

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி: தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற வாலிபர்! அதிரடி காட்டிய போலீஸ்

சோளக்காட்டில் மறைந்திருந்த சாமிதுறையை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கூடமலை கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடம்பூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்ற வாலிபர் ரோஜாவை காதலிப்பதாக கூறி, ரோஜா சென்ற கல்லூரி பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவி ரோஜா, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் வாலிபரை கடுமையாக கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி: தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற வாலிபர்! அதிரடி காட்டிய போலீஸ்

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி மாலை ரோஜாவின் சகோதரி நந்தினி திருமணத்திற்கு, அழைப்பிதழ் கொடுப்பதற்காக உறவினர் வீட்டிற்கு பெற்றோர்கள் சென்றிருந்த நிலையில், ரோஜா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட சாமிதுரை வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரோஜா தப்பி ஓட முயன்றபோது தலையில் ஆறு முறை கல்லைக்கொண்டு அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக உறவினர்கள் கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த வாலிபர் சாமிநாதனை தேடி வந்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, ரோஜா வீட்டில் தனிமையில் இருப்பதை தெரிந்துகொண்டு முதலில் ரகளையில் ஈடுபட்ட சாமிநாதன் பின்னர் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறி, பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சித்துள்ளார்.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி: தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற வாலிபர்! அதிரடி காட்டிய போலீஸ்

உடனே அருகிலிருந்த சகோதரி நந்தினி தண்ணீரை எடுத்து ரோஜாவின் மீது ஊற்றி உள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரோஜாவை துரத்தி சென்றபோது, தடுமாறி கீழே விழுந்த நிலையில் தலையின் மீது கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பி உள்ளார். எனவே காவல்துறையினர் விரைந்து வாலிபர் சாமிநாதனை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரோஜாவிற்கு நடந்த நிலை இனி எந்தப் பெண்ணிற்கும் நிகழக் கூடாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வரும் திங்கட்கிழமை அக்காவிற்கு திருமணம் இருந்த நிலையில் தங்கை காதலை மறுத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாமிதுரை கடந்த இரண்டு நாட்களாக கூடமலை அருகே உள்ள கமட்டப்பன் கோவில் மலைப்பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் சோளக்காட்டில் மறைந்திருந்த சாமிதுறையை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கெங்கவல்லி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget