Kodanad Case Live Updates: கோடநாடு விசாரணை கள ரிப்போர்ட்: செப்.2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி!

Kodanad Murder Case LIVE Updates: நீலகிரி மாவட்டம் கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடுத்தடுத்த அப்டேட் செய்திகளை இங்கு காணலாம்.

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 27 Aug 2021 04:45 PM
Kodanad Case LIVE: செப்.2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணையை செப்.2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஒத்திவைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். 

கோடநாடு வழக்கில் காரசார விவாதம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை துவங்கிய நிலையில், தற்போது காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. 


 

எடப்பாடி பழனிச்சாமி மீது எழுந்த முதல் புகார்!

ஜனவரி 23, 2019:


 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‛சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் எனது தூண்டுதலில் பேசவில்லை,’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தனது குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சயானிடம் விசாரணை..தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்

கோடநாடு விவகாரம் தொடர்பாக சயானிடம் கூடுதல் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊட்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சயான் ஊட்டியில் தங்கி ஜாமீன் கையெழுத்திட்டு வந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது

பூதாகரம் எழுப்பிய செய்தியாளர் சந்திப்பு

ஜனவரி 11,2019:


கோடநாடு விவகாரம் தொடர்பான ஆவணப்படத்தை டெல்லி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், குற்றம்சாட்டப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை பேச வைத்தார். 

2017 ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை!

இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்டேட் கம்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை!

ஜூலை 3, 2017:


மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கோடநாடு எஸ்டேட்டில் மேலும் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். எஸ்டேட்டில் கணினி பிரிவில் பணியாற்றிய 24 வயது இளைஞரான தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி பொறுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய சாலை விபத்துக்கள்!

ஏப்ரல் 28, 2017


கோடநாடு வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் பெயர் அடிப்பட்டது. கனகராஜ், கோடநாட்டிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதும். அவரே சயனுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிட்டதும் பின்னாளில் தெரிந்தது. கனகராஜ், சயான் இருவருமே சாலை விபத்துகளில் சிக்கினர். இதில் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மனைவி, குழந்தையுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது. சயான் பிழைத்துக் கொள்ள, மனைவியும், குழந்தையும் இறந்தனர்.

கோடநாடு மேல்முறையீடு தடை வழக்கு: இன்று உத்தரவு

கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடைகேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவு பிறக்கப்பட உள்ளது. 

முதல் கைது நடந்தது எப்போது?

ஏப்ரல் 27, 2017


சம்பவம் நடந்த மூன்று நாட்களில் போலீஸார் முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

2021: சயானுக்கு ஜாமீன்

வழக்கில் தொடர்புடைய 8 பேர் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் சயானுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆர்.சுப்ரமணியன் சயானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். 

மேலும் சில கைதுகள்...மற்றுமொரு மரணம்

வாளையாறு மனோஜ் சாமி, டீபு, ஜித்தன் ஜாய், ஜம்ஷோர் அலி, உதயகுமார், சந்தோஷ் சாமி, சதீஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மனோஜ் தவிர மற்றவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே எஸ்டேட் பங்களாவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. 2017ல் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வருகை

அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றம் வருகை. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சை பாபா வருகை. இன்னும் சிறிது நேரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. 

கனகராஜ் மரணம்.. சயான் மனோஜ் கைது!

அடுத்த சில நாட்களிலேயே போலீசார் சயான் என்பவரைத் தேடத் தொடங்கினர். இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜூம் தேடப்பட்டார். இதற்கிடையே கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். சயான் பாலக்காட்டில் குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். காயமடைந்த சயான் பிறகு போலீசால் கைது செய்யப்பட்டார். 

பிள்ளையார் கோயிலில் சயன் தீவிர வழிபாடு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் உதகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாடு செய்தார். தற்போது விசாரணைக்கு ஆஜராக வளாகத்தில் காத்திருக்கிறார்

கோடநாடு சம்பவம் நடந்தது என்ன? எப்போது?

கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் 800 ஏக்கர் டீ எஸ்டேட்டில் மர்ம நபர்கள் நுழைந்துவிட்டதாகவும் அங்கே அதிகாலை நேரத்தில் கொலை நடந்திருப்பதாகவும் பரபரப்புத் தகவல் வெளியானது. ஓம் பகதூர் என்ற காவல்காரர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இன்னுமொரு காவலாளி காயங்களுடன் மீட்கப்பட்டார். பங்களாவின் வாயில் கதவு எண் 10ல் இந்தக் கொடூர சம்பவம் நடந்திருந்தது. ஓம்பகதூர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அருகிலிருந்த மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார். கேட் எண் 8ல் கிருஷ்ண பகதூர் தாக்கப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்டிருந்தார். பங்களாவில் சிசிடிவி கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தான் இந்த சம்பவம் நடந்தது. ஜெயலலிதா, சசிகலாவின் அறைகளில் இந்தச் சம்பவம் நடந்தது. பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவின் அறையில் இருந்து 5 உயர்ரக கைக்கடிகாரங்கள் மட்டுமே காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

2017 கோடநாடு கொலை

24 ஏப்ரல் 2017ல் கோடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு காவலாளியும் மயக்கமான நிலையில் இருந்தார். ஜெயலலிதாவின் முக்கிய ஆவணங்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோடநாடு இதுவரை...

கிரெக் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயரிடமிருந்து 94ல் ஜெயலலிதா மற்றும் சசிகலா வாங்கியதுதான் கோடநாடு பங்களா. இன்னமும் இந்த பங்களாவுக்கான நிலுவைத்தொகையை சசிகலா தரப்பு தரவில்லை.  இதற்கிடையேதான் 2017ல் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றம் வந்தார் சயன்

கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், அதற்காக உதகை நடுவர் நீதிமன்றம் வருகை வந்தார், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயன். 

Background

Kodanad Case LIVE Updates:


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை வழக்கு தொடர்பான விசாரணை உதகை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சயன் உள்ளிட்டோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்திய நிலையில், இன்று விசாரணை அறிக்கை சம்மந்தப்பட்ட உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் ஏதேனும் உத்தரவோ, சம்மனோ அனுப்ப வாய்ப்புள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.