மேலும் அறிய

புர்கா அணிந்து வந்த இளைஞர்.. பெண்கள் கழிவறையில் கேமரா.. பி.டெக் பட்டதாரி பார்த்த கேவலமான வேலை..!

கொச்சியில் புர்கா அணிந்து பெண் வேடத்தில் வந்த இளைஞர் பெண்கள் கழிவறைக்குள் ரகசிய கேமரா பொருத்தி அவர்களை படம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் வெளியில் செல்லும்போது புர்கா அணிவது அவர்களது வழக்கம் ஆகும். திரைப்படங்களில் அந்த புர்காவை ஆண்களும் அணிந்து வெளியில் செல்வது போல நகைச்சுவை காட்சிக்காகவோ, அல்லது சண்டை காட்சிக்காகவோ பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், தற்போது கேரளாவில் பெண்கள் கழிவறைக்குள் இளைஞர் புர்காவை அணிந்து கொண்டு உள்ளே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புர்கா அணிந்த இளைஞர்:

கேரளாவில் அமைந்துள்ள கொச்சி மிகவும் பிரபலமான நகரம் ஆகும். இந்த நகரத்தில் பிரபல தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இதனால், இந்த வணிக வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே ஏராளமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பெண்கள் கழிவறைக்கு முன்பு புர்கா அணிந்த ஒரு பெண் மட்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அந்த வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கழிவறைக்குள் ரகசிய கேமரா:

இதையடுத்து, போலீசார் வரும் முன்பு அந்த பெண்ணிடம் விசாரிக்க சென்ற பாதுகாவலர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. புர்கா அணிந்து பெண் போல நடமாடிக்கொண்டிருந்தது ஒரு இளைஞர் ஆவார். இதையடுத்து, அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அபிமன்யு என்றும், அவர் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

23 வயதே ஆன அபிமன்யு புர்காவை அணிந்து பெண் போல பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது செல்போனை ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் வைத்து கேமரா மூலமாக உள்ளே வரும் பெண்களை படம்பிடிக்கும் வகையில் செட் செய்து வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவர் உள்ளே சென்று வெளியில் வந்தது வரை யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

கைது:

பின்னர், வெளியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததாலே அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிமன்யுவின் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பி.டெக் பட்டதாரியான இவரை வணிக வளாகத்தில் பணியாற்றும் சிலர் இழுத்துச் செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவரை சுற்றி நின்று பல பெண்களும் சரமாரியாக திட்டியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

கேரளாவின் மிக பிரபலமான வணிக வளாகத்தில் பெண்கள் கழிவறைக்குள் புர்கா அணிந்து கொண்டு புகுந்து கேமராவை வைத்து படம்பிடித்த காட்சி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அபிமன்யு மீது 354 சி, 419 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இதுபோன்று வேறு எங்கேனும் சென்று பெண்களை ரகசியமாக படம் பிடித்துள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget