மேலும் அறிய

கரூர்: பாதை பிரச்னையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்

கோவிந்தசாமி மற்றும் கருப்பண்ணன், காத்தவராயன் ஆகியோருக்கு இடையே தோட்டத்திற்கு செல்லும் பொதுப் பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே பாதை பிரச்சனையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது.

உப்பிடமங்கலம் அருகே உள்ள ராசா கவுண்டனூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 85). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரின் தோட்டத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (வயது 70). அவரின் தம்பி காத்தவராயன் (வயது 65) ஆகியோரின் தோட்டம் உள்ளது.

கரூர்: பாதை பிரச்னையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்

கோவிந்தசாமி மற்றும் கருப்பண்ணன், காத்தவராயன் ஆகியோருக்கு இடையே தோட்டத்திற்கு செல்லும் பொதுப் பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தசாமியின் மனைவி ராஜம்மாள் (வயது 75). வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதையடுத்து கோவிந்தசாமி மற்றும் அவரின் உறவினர்கள் அந்தப் பாதையின் வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

கரூர்: பாதை பிரச்னையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்

இதனை அறிந்த கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோர் அந்தப் பாதையில் தடைகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து, அந்தப் பாதையின் வழியாக தனது மனைவியின் உடலை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து தருமாறு வெள்ளியணை போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தாசில்தார் சிவக்குமார், வெள்ளியணை வருவாய் ஆய்வாளர் ஜெயவேல், ஒப்பிடமங்கலம் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, வெள்ளியணை சப் இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்: பாதை பிரச்னையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்

இதில் பிரச்சனைக்குரிய பாதை வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்லாமல் மாற்றுப்பாதையில் எடுத்துச் செல்வதாக கோவிந்தசாமி மற்றும் அவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன், ஜெயராமன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். அதன்படி மூதாட்டி ராஜம்மாவின் உடலை மாற்று பாதையில் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget