மேலும் அறிய

Crime: காதலால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவர் உயிரிழப்பு - கரூரில் சோகம்

கரூர் குளித்தலை அருகே அய்யர்மலையில் இரு தரப்பினருடைய ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த ஐடிஐ மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர் மலையில் உள்ள கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் கல்லூரி மாணவி கீழக் குட்டப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குரு பிரகாஷ் மீண்டும் அந்த கல்லூரி மாணவியுடன் தொடர்பு கொண்டு பேசிய போது மதுரை மாணவி காதலன் ஆட்டோ டிரைவர் அருண்குமாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அருண்குமார் குருபிரகாஷிடம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி  பேசி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு அருண்குமார் நேற்று கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய் ஆகியோரும் மூலம் சமாதானம் பேசுவதற்காக குரு பிரகாஷை  வரவழைத்துள்ளார்.


Crime: காதலால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவர் உயிரிழப்பு - கரூரில் சோகம்


அப்போது குரு பிரகாஷின் பெரியப்பா மகனான ஐடிஐ மாணவன் விக்னேஷ் (எ) விக்னேஸ்வரன் என்பவருடன் குரு பிரகாஷ்  வந்துள்ளார்.

அய்யர்மலை தெப்பக்குளத்தில் வைத்து  குரு பிரகாஷை அருண்குமார் அவரது சகோதரர் சங்கர் கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை விஜய் சரவணன் தாக்கியுள்ளனர்.

 குரு பிரகாஷ் தாக்குவதை தடுக்க வந்த விக்னேஸ்வரனையும் உருட்டு கட்டை மற்றும் கற்களால்  தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குரு பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


Crime: காதலால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவர் உயிரிழப்பு - கரூரில் சோகம்

 ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், வீரகுமாரன் பட்டியை சேர்ந்த செல்லதுரை, கண்டியூரை சேர்ந்த விஜய், வை.புதூரை சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget