கொரோனா பரவல் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக பரவி வரும் ஒமிக்ரான் மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை 21 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று அங்கு தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு குழந்தைகள் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையில், அது ஒமிக்ரான் தொற்றா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.




நவம்பர் 14 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரையில் 5 வயதுக்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய அலையை விட தற்போதைய அலையில் குழந்தைகள் பெருமளவு தொற்றால் பாதிக்கப்படுவது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காரணம் என்ன? 


ஆப்பிரிக்காவில் டெல்டா மூன்றாம் அலையில் 19 வயதுக்குட்ப்பட்ட 43 சதவீதத்தினர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு  தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனால் 12 வயதுக்குட்ப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால்தான் குழந்தைகள் அதிகளவு தொற்றுக்கு உள்ளாவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  
 
ஏன் ஒமிக்ரான் தொற்றை கண்டறிவதில் தாமதம்:


ஒமிக்ரான் தொற்றை உறுதி செய்ய 4 முதல் 5 நாட்கள் ஆகும் என்பதே இந்த தாமததிற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக தென்னாப்பிரிக்காவில் விஞ்ஞானிகள் 36 ஆயிரம் மாதிரிகளை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில் இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், இவர்களுக்கு மீண்டும் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இது ஒமிக்ரான் தொற்றா என்பது உறுதி செய்யப்படவில்லை