மேலும் அறிய

Watch Video: படுக்கை நிறைய ரூ.500 ரூ.2000 நோட்டுகள்... கட்டுக்கட்டாய் கட்டிலில் அடுக்கும் யார் இந்த சுஷில் குண்டு?

Sushilkundu: 10 ரூபாயை பெற இன்னும் இங்கே பலர் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். இவர் என்னவென்றால் , கட்டுக் கட்டாக பணத்தை என்ன செய்கிறார் பாருங்கள்!

பணம் எல்லாம் தண்ணிபட்ட பாடு என்பார்கள். ஆனால், சம்பாதிப்பதும், அதற்காக சங்கடங்களை அனுபவிப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும், பணம், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது; அதை துரத்த, என்னப்பாடு படுகிறோம் என்பதை! இங்கு பணம் இல்லாமல் எதுவும் இல்லை. இல்லாததையும் உருவாக்கும் பலம் பணத்திற்கு உண்டு. அதனால் தான், மனத்தை விட பணத்திற்கு மனிதம் முக்கியத்துவம் தருகிறார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gold 💪boy (@sushilkundu001)

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், அந்த 10 ரூபாயை பெற இன்னும் இங்கே பலர் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தை என்னவெல்லாம் செய்வார்? சேமிப்பார், முதலீடு செய்வார், வீட்டில் வைப்பார், ஏன்... தானம், தர்மம் கூட செய்வார். இங்கே ஒருவர், தனக்கு தேவைக்கு அதிகமாக பணம் வரும் போது, அவர் செய்யும் சேஷ்டைகளுக்கு அளவே இல்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aryan Malik (@jaatdevta_421)

ஆம், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுஷில் குண்டு என்பவர், நல்ல பணப்புழக்கம் கொண்ட நபர். கோல்டு பாய் என்று அழைக்கப்படும் இவர், கழுத்து நிறைய தங்க சங்கிலியால் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர். நம்மூர் ஹரி நாடார், வரிச்சூர் செல்வம் மாதிரி என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. எப்போதுமே இவரது இன்ஸ்ட்டா பக்கம் , கொஞ்சம் காரசாரமாக இருக்கும். கையில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, கேங்ஸ்டர் போல வலம் வருவது, நகைகள் அணிந்து, கேட் வாக் போவது என இவர் செய்யும் வேலைகள் படுபயங்கரம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gold 💪boy (@sushilkundu001)

இவருக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் என நினைக்கிறேன். கட்டுக்கட்டாக குவியும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், தனது படுக்கையில் 500 ரூபாய், 2000 ரூபாய் கட்டுகளை அடுக்கி; அடுக்கி என்று கூட சொல்ல முடியாது.... வீசி, படுக்கை முழுவதும் பணமாக மாற்றி, அதில் உறங்கும் பழக்கத்தை தொடங்கியுள்ளார். அவனவன், ஐநூறு ரூபாய் சம்பாதிக்க நாயாய் உழைத்துக் கொண்டிருக்கிறார். நோகாமல், இவர்கள் சம்பாதித்து. இது போன்ற வீடியோக்களை போட்டு, எளியோரை எரிச்சலடையச் செய்கின்றனர். நேர்மையாக வரும் பணத்தை யாரும் இப்படி அலட்சியப்படுத்த மாட்டார்கள். எது எப்படி இருந்தாலும், இது கொஞ்சம் ஓவர் தான். 

தலைப்பு செய்திகள்

பல்வேறு குற்றப்பின்னணி... கரும்பு காட்டில் வைத்து கொடூரமாக கொலை ; பழிக்குப்பழி தான் காரணமா?
பல்வேறு குற்றப்பின்னணி... கரும்பு காட்டில் வைத்து கொடூரமாக கொலை ; பழிக்குப்பழி தான் காரணமா?
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
Embed widget