பாத்ரூம் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை: சிசிடிவில் சிக்கிய துப்புரவுத்தொழிலாளி!
எப்போது வேண்டுமானாலும் 1098 என்ற ஹெல்ப் லைன்க்கு கால் செய்யலாம் என அறிவித்திருந்தாலும், இன்னமும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கத்தான் செய்கிறது.
வாரணாசி பள்ளியில் உள்ள கழிப்பறையில் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளெல்லாம் ஒவ்வொரு வீட்டில் சுற்றித்திரியும் தேவதை என்பார்கள். ஆனால் சில காம மிருகங்கள் இவர்களையும் விட்டுவைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 2 வயது முதல் இளம் பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன. இப்படியொரு நிகழ்வு தான் வாரணாசியில் பள்ளிச்சிறுமிக்கு அரங்கேறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக ஒராண்டு காலமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த குழந்தைகள் தற்போது பழைய நிலைமைக்கு வந்துவிட்டனர். பெற்றோர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அங்கேயே பாலியல் வன்முறைகள் நிகழும் சம்பவங்கள் தான் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள சிக்ரா என்ற இடத்தில் தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் பயின்று வந்தார். வழக்கம் போல பள்ளிச்சீருடையில் வந்த மாணவி வீட்டிற்குத் திரும்பும் போது, அவரிடம் மாற்றத்தைக்கண்டு என்ன நடந்தது? என பெற்றோர்கள் விசாரித்துள்ளனர்.
பள்ளியில் கழிப்பறைக்குச் சென்றதாதகவும், அப்போது அங்கே துப்புரவுத்தொழிலில் ஈடுபட்டுவந்த சின்கு என்பவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து சிக்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் பள்ளிக்குச் சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளையெல்லாம் எடுத்து விசாரணை நடத்தினார். இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என உறுதியான நிலையில், சின்கு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இதுக்குறித்து எப்போது வேண்டுமானாலும் 1098 என்ற ஹெல்ப் லைன்க்கு கால் செய்யலாம் என அறிவித்திருந்தாலும், இன்னமும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கத்தான் செய்கிறது. எனவே பெற்றோர்களும் பணிக்கு மத்தியில் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? பள்ளியில் என்ன நடந்தது? என கேட்ட வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.
குறிப்பாக இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நிச்சயம் நல்ல பலனளிக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.