Gokulraj Mother: தூக்கு தண்டனை கேட்டிருந்தோம்.. முதல்வருக்கு நன்றி தெரிவித்த கோகுல்ராஜ் தாயார்
10 பேரும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது எனவும் கோகுல் ராஜின் தாயார் சித்ரா கூறினார்.
யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை விவரம் வெளியானதை தொடர்ந்து, நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களுக்கு கோகுல்ராஜின் தாயார் சித்ரா அளித்த பேட்டியில், “என்னை போன்றவர்களுக்கு இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எனது மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
#BREAKING | எனக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது - கோகுல்ராஜின் தாயார் சித்ரா https://t.co/wupaoCQKa2 | #Gokulraj #Madurai pic.twitter.com/QkD2iiXMcj
— ABP Nadu (@abpnadu) March 8, 2022
முன்னதாக, , கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “சாதிய வன்மத்துடன் கோகுல்ராஜை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பட்டியல் இன மாணவர் கோகுல்ராஜ் 9 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் 10 பேரும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு கோகுல்ராஜ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
முன்னதாக, கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்