மேலும் அறிய

திருமணமான மூன்றே மாதங்கள்.. ஆன்லைன் ஆர்டர்! வாயில் ஹீலியம் செலுத்திக்கொண்டு இளம்பெண் தற்கொலை..!

திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் வாயில் ஹீலியம் வாயு செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் வாயில் ஹீலியம் வாயு செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளைத்தை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவருக்கு 25 வயதான இந்துமதி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் ஒரு பி.இ., பட்டதாரி. இந்துமதிக்கும் விஷ்ணு சாரதி என்ற நபருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அவரை பார்ப்பதற்கு தனியாக இந்துமதி தன் தந்தையின் ஊரான பொலவக்காளி பாளைத்திற்கு வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று மதியம் இந்துமதி மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் இந்துமதி வெளியே வராதாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதைவை தட்டியுள்ளனர். வெகு நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் உடனடியாக உறவினர்களை அழைத்து கதைவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

அப்போது, இந்துமதி முகத்தில் பாலிதீன் கவர் சுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையில், இந்துமதி முகத்தில் பாலிதீன் கவரைபோட்டு முகத்தில் மூடிக்கொண்டு, பலூனில் நிரப்ப உதவும் ஹீலியம் கேஸ் டியூப் வழியாக வாயில் காற்றை செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்துமதி ஆன்லைன் வாயிலாக ஹீலியம் வாயு வாங்கி இருப்பது தெரிய வந்தது. 

திருமணமாகி மூன்று மாதங்கள் ஆன நிலையில் கோபி ஆர்டிஓ திவ்ய பிரியதர்ஷினி விசாரணை நடத்தி வருகிறார். இந்துமதியின் தற்கொலைக்கு காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து கோபி செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கான காரணங்கள் : 

தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 

மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)

அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget