மேலும் அறிய

சிதம்பரம் அருகே  கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் அருகே  கல்லூரி மாணவர்களிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா-  மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது.

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலைநகர் காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் (பொ), உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன் மற்றும் போலீசார் அண்ணாமலைநகர் அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் வாணியம்பாடி நெடுஞ்செழியன் (24), சென்னை அடையார் ஹபீஸ்(23), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் ஒரு மாணவர் சிதம்பரம் எம்.கே தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவர் ஆகாஷ் (22) என்பதும் தெரிந்தது. இவர்களை போலீசார் சோதனை செய்ததில் அவர்கள் 4 பேரும் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா வைத்திருந்ததும், போலீசார் அவர்களை கைது செய்ததும் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
"போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த ரவுடி கொலை " இன்ஸ்டாவில் பதிவிட்ட கொலையாளிகள்
அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்: அண்ணன், உடந்தையான தாய் போக்சோவில் கைது!
அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்: அண்ணன், உடந்தையான தாய் போக்சோவில் கைது!
“புடிங்க சார் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க” தாய், தந்தையை தாக்கிய மகன்! கஞ்சா கேசில் கைது!
“புடிங்க சார் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க” தாய், தந்தையை தாக்கிய மகன்! கஞ்சா கேசில் கைது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Embed widget