மேலும் அறிய

கல்லறை கட்ட கல்லு கிடைக்குமா? ஒரே போன்காலில் நடந்த கடத்தல்..! சிக்கிய கடத்தல் கும்பல்!

கடத்தப்பட்ட நபரின் மனைவிக்கு உதவி செய்வது போல் நாடகமாடிய நபர் உள்ளிட்ட 6 பேர் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது36), இவர் அஙகுள்ள மாமல்லபுரம்- திருக்கழுக்குன்றம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது செல்போனில் மறு முனையில் பேசிய நபர் ஒருவர், மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுடுகாட்டில் உறவினர் ஒருவருக்கு தாங்கள் கல்லறை கட்ட இருப்பதாகவும் அதற்கு ஜல்லி, எம்.சாண்ட் மண் வேண்டும் என்று கூறியுள்ளார். பிறகு எதிர் முனையில் பேசிய நபரின் வார்த்தையை நம்பிய ஆனந்தன் செல்போனில் பேசிய நபர் சொன்ன இடத்தில் ஜல்லி, எம்.சாண்ட் மணலை இறக்கி விட்டு அதற்குண்டான பணம் கேட்ட போது அங்கிருந்த நபர் ஏ.டிஎம்.மில் எடுத்து தருவதாக கூறி தான் எடுத்து வந்த ஒரு வெள்ளை நிற காரில் அவரை (ஆனந்தன்) கிழக்கு கடற்கரை சாலை வழியாக 5 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். 
 
கல்லறை கட்ட கல்லு கிடைக்குமா? ஒரே போன்காலில் நடந்த கடத்தல்..! சிக்கிய கடத்தல் கும்பல்!
அப்போது ஆனந்தன் என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டபோது காரில் இருந்த 5 நபர்களும் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உன்னை கடத்தி வந்துள்ளோம் என்றும், உன்னை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் உன் மனைவியை நாங்கள் சொல்லும்  இடத்திற்கு ரூ.5 லட்சம் பணத்துடன் வரச் சொல் என்று கூறி அவரது மனைவிடம் பேனில் பேச வைத்துள்ளனர். பிறகு தனது கணவர் போன் மூலம் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து பதட்டம் அடைந்த ஆனந்தனின் மனைவி நித்தியாவிடம் (30)  கடைக்கு அருகில் கற்சிலை வடிக்கும் வேலை செய்யும் கராத்தே சரவணன் (வயது40) என்பவர் வலியச்சென்று கடத்தப்பட்ட உங்கள் கணவரை மீட்க நான் உதவியாக இருப்பேன் என்று ஆறுதல் கூறுகிறார். நித்தியா கராத்தே சரவணனுடன் தனது கணவரை மீட்க வாயலூர் பாலாற்று பாலம் அருகில் சென்று அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் முதல் கட்டமாக கடத்தல் ஆசாமிகள் கேட்ட ரூ.5 லட்சத்தில் 2 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறார். இப்பணம் பத்தாது என்று கூறிய கடத்தல் கும்பல் நித்தியாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க செயினையும் பறித்து கொண்டு ஆனந்தனை அவரது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிடுகின்றனர்.
 
கல்லறை கட்ட கல்லு கிடைக்குமா? ஒரே போன்காலில் நடந்த கடத்தல்..! சிக்கிய கடத்தல் கும்பல்!
 
பின்னர் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்ட ஆனந்தன் தன் மனைவியுடன் வந்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தன்னை கடத்தி சென்று ரூ.2 லட்சம் பணம், 1 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பல் பற்றி புகார் செய்தார். அப்போது அவர்களுக்கு உதவி செய்வதுபோல் உடன் வந்திருந்த கராத்தே சரவணன் தன்னுடைய பெயரை புகாரில் சாட்சியாக போட வேண்டாம் என்றும், தனக்கு இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றும் ஆனந்தனிடம் கூறியுள்ளார். பிறகு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரித்து வந்தனர்.

கல்லறை கட்ட கல்லு கிடைக்குமா? ஒரே போன்காலில் நடந்த கடத்தல்..! சிக்கிய கடத்தல் கும்பல்!
 
இதற்கிடையில் ஆனந்தன் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல் நடித்து வந்த கராத்தே சரவணனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரது செல்போனை கண்காணித்தனர். அப்போது கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிறகு போலீசார் கராத்தே சரவணனை அழைத்து தீவரமாக விசாரித்தபோது, ஆனந்தனை கடத்த முழு திட்டம் போட்டதும், நித்தியாவிடம் அவரது கணவரை மீட்க உதவி செய்வது போல் நடித்து நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
 
கல்லறை கட்ட கல்லு கிடைக்குமா? ஒரே போன்காலில் நடந்த கடத்தல்..! சிக்கிய கடத்தல் கும்பல்!
பிறகு கராத்தே சரவணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாமல்லபுரம் அருகில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த மணிமங்கலம் மூர்த்தி (வயது40), ஆலிகுப்பம் விஜயகுமார்(வயது39), செம்மஞ்சேரி அர்ஜூன் (வயது35), சென்னை மயிலையை சேர்ந்த ரஞ்சித்குமார்(38), மகேந்திரன் (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்த கராத்தே சரவணன் வடக்கு மாமல்லபுரம், அண்ணல் காந்தி தெருவை சேர்த்வர் ஆவார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கடத்தல் கும்பலிடம் இருந்து 3 கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கராத்தே சரவணன் உள்ளிட்ட 6 பேரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்Red Pix Apologize | ”சவுக்கின் கருத்தில் உடன்பாடில்லை.. மன்னிச்சிடுங்க”Savukku Shankar | கையை பிடித்து முறுக்கி.. வலி தாங்க முடியாத சவுக்கு ADVOCATE பகீர் தகவல்Savukku Shankar | ’’செல்போன் நம்பர் கேட்டாரு!’’பெண் காவலர் பகீர் புகார்! அடுத்த சிக்கலில் சவுக்கு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Embed widget