மேலும் அறிய

உடலை நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்றது ஏன்? செவிலியரை கொன்ற கொடூரன் அதிர்ச்சி வாக்குமூலம்

ஈரோடு அருகே நகைக்காக உடன் பணியாற்றும் செவிலியரை கொலை செய்து நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்ற கொடூர கொலைகாரன்.

ஈரோடு அருகே செவிலியர் கொல்லப்பட்ட வழக்கில் உடன் பணியாற்றும் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். நகைக்காக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். கட்டுமான தொழிலாளி . இவரது மனைவி உத்ரா (26) நர்சிங் படித்துள்ளார். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியினர் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கும், உத்ரா அதே பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி முதல் செவிலியராக வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார். காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது மனைவியை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு இரவு வேலை முடிந்து திரும்ப வரும்போது மனைவி உத்ராவையும் அழைத்து வருவார்.

 

மனைவியை காணவில்லை

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி மனைவியை வழக்கம் போல் ரஞ்சித்குமார் காலையில் அழைத்து மருத்துவமனைக்கு சென்று விட்டு  இரவு மனைவியை கூப்பிட மருத்துவமனைக்கு  வந்தபோது மனைவி சீக்கிரமாகவே சென்று விட்டதாக தனியார் மருத்துவமனையில்தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, அங்கிருந்து வீட்டுக்கு சென்ற  ரஞ்சித்குமார் பார்த்தபோது வீட்டில் மனைவி உத்ரா இல்லை. செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் எடுக்காத காரணத்தால் அதிர்ச்சி அடைந்தவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியுள்ளார். ஆனால் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் கடந்த 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மனைவி உத்ராவை காணவில்லை என புகார் அளித்தார் .

நிர்வாண நிலையில் கிடந்த உடல்

இதனைத்தொடர்ந்து,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் ஒரு காட்டில் இளம்பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு பெருந்துறை போலீசார் சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் உடல் அழுகி போய் இருந்தது. இதனை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சில தடயங்களை சேகரித்து தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது கடந்த 14 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் உத்ரா என்பது தெரிய வந்தது.

தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற கணவர்

இதுகுறித்து உத்ராவின் கணவருக்கு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ரஞ்சித் குமார் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார் .  துக்கம் தாங்காமல் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் ரஞ்சித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் அதே மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடன் பணியாற்றுவர் மீது சந்தேகம்

இந்தக் கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீசார் கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், செவிலியர் உத்ரா பணியாற்றும் மருத்துவமனை பகுதியில் இருந்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதி வரையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு  செய்தனர். மேலும், உடன் பணியாற்றும் நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றி வந்த சரவணன் என்பவர் மீது காவல் துறைக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், உத்ரா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சரவணனின் செல்போன் எண் ஒரு பேப்பரில் இருந்துள்ளது. இதனால், விசாரணை வளையத்திற்குள் வந்த சரவணனிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், உத்ரா பணி முடிந்து சீக்கிரமாக செல்லும் போது அவரை பின் தொடர்ந்த சரவணன் உத்ராவை தான் வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற உத்ராவை தேசிய நெடுஞ்சாலையில் அருகே செல்லும் சர்வீஸ் சாலை அருகே அழைத்து சென்றுகொண்டிருந்தபோது ஆட்கள் இல்லாத இடத்தில்  திடீரென வண்டியை நிறுத்தி உத்ரா அணிந்துருந்த நகைகளை தருமாறு கேட்டதாகவும் இதற்கு உத்ரா மறுப்பு தெரிவித்ததால்  துப்பட்டாவை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உத்ராவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தாலிக் கொடியை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்த சரவணன், போலீசார் தன்னை தேடி வரக்கூடாது என்பதற்காக கொலையை திசை திருப்ப உத்ராவின் உடலில் இருந்த துணிகளை அகற்றிவிட்டு அங்கேயே உடலை போட்டு விட்டு பெருந்துறைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

செலவுக்கு பணம் தேவைப்பட்டது

மேலும், தன் செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் பலரிடமும் கேட்டு யாரும் தராதால் உத்ரா அணிந்து இருந்த நகையை கண்டு கேட்டதாகவும் அதற்கு தர மறுக்கவே நகைக்காக கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சரவணன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சரவணனை கைது செய்து பெருந்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும், நகைகளையும் மீட்டனர்.

நகைக்காக உடன் பணியாற்றும் செவிலியரை உடன் பணியாற்றும் செவிலியரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விமான நிலையத்தில் வேலை...ரூ.20 லட்சத்துக்கு மேல் மோசடி - முன்னாள் அதிகாரியை தட்டித்தூக்கிய போலீஸ்!
விமான நிலையத்தில் வேலை...ரூ.20 லட்சத்துக்கு மேல் மோசடி - முன்னாள் அதிகாரியை தட்டித்தூக்கிய போலீஸ்!
பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?
பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?
இன்ஸ்டா பதிவால் பகை… வடமாடு மஞ்சுவிரட்டுக்கு வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக்கொலை!
இன்ஸ்டா பதிவால் பகை… வடமாடு மஞ்சுவிரட்டுக்கு வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக்கொலை!
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Embed widget