திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஜாதிகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (வயது 55). விவசாயியான இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகனும், முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில், மகன் நாகபாலன் கரூரில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். உத்தப்பனுக்கு ஜாதிகவுண்டன்பட்டி அருகே கொல்லப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது.


Murasoli : இளையராஜா ஒரு படைப்பாளி..! அவரை விட்டுவிடுங்கள்..! பாஜகவை சாடிய முரசொலி.




இந்த நிலத்தின் அருகில், சுப்பம்மாளின் உறவினரான கொல்லப்பட்டியை சேர்ந்த மணிமாலமுருகன் (35) என்பவருக்கும் நிலம் உள்ளது. இதனால் உத்தப்பனுக்கும், மணிமாலமுருகனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது. இதனால் 2 குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் நேற்று மாலை உத்தப்பன் கொல்லப்பட்டியில் இருந்து தனது வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொல்லப்பட்டியில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, எதிரே வந்த மணிமாலமுருகன் வழிமறித்து தகராறு செய்தார்.


Viral Video : வீரம்னா என்னன்னு தெரியுமா? சுழலில் சிக்கிய கப்பல்.. காப்பாற்றி அதிரடிகாட்டிய கேப்டன்


இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிமாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் உத்தப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். பின்னர் அங்கிருந்து மணிமாலமுருகன் தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உத்தப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Jadeja : சென்னை அணியில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா? ... இன்ஸ்டாகிராம் பதிவுகளை அகற்றியதால் ஷாக்..




இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய மணிமாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர். நிலத்தகராறில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.