Jadeja : சென்னை அணியில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா? ... இன்ஸ்டாகிராம் பதிவுகளை அகற்றியதால் ஷாக்..

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிஎஸ்கே குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்காக ஆடுவதால் அதைப் பற்றி கேளுங்கள் என பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

Continues below advertisement

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா செய்த செயல் ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஐபிஎல்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டனாக ஜடேஜாவை சென்னை அணி நிர்வாகம் நியமித்தது. தோனியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும்  அணியின் நலனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். 

ஆனால் நினைத்தது ஒன்று ..நடந்தது ஒன்று என்ற கதையாக ஜடேஜா தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் தொடரில் சொதப்பியது. ஜடேஜா டாஸ் போட மட்டும் தான் கேப்டனாக இருக்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தோனி தான் எல்லா முடிவையும் எடுக்கிறார் என்ற பல விமர்சனங்கள் எழத் தொடங்கிய நிலையில் ஜடேஜா பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தோனியிடம் கேப்டன் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின் காயத்தால் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஜடேஜா விளையாடவில்லை. 

இதனிடையே சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதமடித்து அசத்தினார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிஎஸ்கே குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்காக ஆடுவதால் அதைப் பற்றி கேளுங்கள் என பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். இந்நிலையில் ஜூலை 7 ஆம் தேதி தோனி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். 

ஆனால் ஜடேஜா தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.அதேசமயம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சென்னை அணி தொடர்பான பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் 2023 சீசனில் சென்னை அணியில் ஜடேஜா விளையாடமாட்டாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement