மேலும் அறிய

அசல் மலபார் பீடியை நகல் எடுத்து விற்பனை செய்த இருவர் கைது; கட்டு கட்டாக பீடி பண்டல்கள் பறிமுதல்!

பெயரிலேயே அசல் என வைத்திருக்கும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, அசலை நகலாக்கி அதே பெயருடன் போலிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

திண்டுக்கல்லில் பிரபல பீடி கம்பெனியின் பெயரில்  போலி பீடிகள்  தயார் செய்து விற்பனை. ஒரு லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள் பறிமுதல் இருவர்  கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பேட்டை ரோட்டை சேர்ந்தவர்கள் அன்வர் அலி, ஜான்பாண்டியன் இவர்கள் போலி பீடிகள்  தயார் செய்து விற்பனை செய்வதாக தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் இன்று 01.08.21  போலீசார் பேட்டை  ரோட்டில் உள்ள அன்வர்அலி மற்றும் ஜான்பாண்டியன் வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர்.  அப்போது பிரபல கம்பெனிகளின் பெயரில் போலியான லேபிள்களை தயார் செய்து போலியான பீடி மீது ஒட்டி இருப்பது தெரியவந்தது. அது என்னடா போலி பீடி... என போலீசார் அந்த பண்டல்களை பிரித்து பார்த்த போது, அதிர்ந்து போனார்கள். ‛அசல் மலபார்’ என்கிற பிரபல பீடி கம்பெனியின் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்பட்டிருந்தது. 

பெயரிலேயே அசல் என வைத்திருக்கும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, அசலை நகலாக்கி அதே பெயருடன் போலிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த போலிகளை தயாரிக்கும் கும்பல், ஒரு வித நியாயத்தை கடைபிடித்திருந்தார்கள். வெறுமனே ஒரு நிறுவனத்தை மட்டும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அசல் மலபார் போலவே, செய்யது உள்ளிட்ட பிரபல பீடி நிறுவனங்களின் பெயரையும் பயன்படுத்தியிருந்தனர். ஒட்டப்போவது லேபிள்... அதிலென்ன நியாயம், தர்மம் என்கிற சிந்தனையில், பல முன்னணி நிறுவன லேபிள்களை அச்சடித்து, போலி பீடிகளில் அவற்றை ஒட்டி ஜோராக விற்பனை செய்து வந்துள்ளனர். 

அன்வர் அலி மற்றும் ஜான் பாண்டியன் ஆகிய இருவரின் வீடுகளிலிருந்து நான்கு மூட்டைகளில்  சுமார் 100 கிலோ எடை கொண்ட பீடி பண்டலங்கள்  மற்றும்  அவர்கள் பயன்படுத்திய மாருதி காரையும்  பறிமுதல் செய்தனர். போலி பீடி தயாரித்து விற்பனை செய்ததற்காக இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பிடியின் மதிப்பு ரூ ஒரு லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது. மாருதி காரில் தென் மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்களின் போலி பீடிகளை டெலிவரி செய்து வந்துள்ளனர். இதில் விசேசம் என்னவென்றால், அவர்களின் பீடியை போலி என உபயோகிப்பவர் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான தயாரிப்பாக இருந்திருக்கிறது. முறையாக சொல்ல வேண்டுமானால்... இவர்களின் தயாரிப்பை முறையான அனுமதி பெற்று புதிய பிராண்ட் பெயரில் வெளியிட்டிருந்தால் கூட இவர்கள் நிறுவனர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால், உடனே பணம் ஈட்ட ஆசைப்பட்டு, அடுத்தவர் பிராண்டில் பயணிக்க நினைத்து இன்று பரிதாபமாக சிக்கியிருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget