ஒட்டன்சத்திரத்தில் இரு இளைஞர்களிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் கல்லால் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லால் தாக்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


தலைமை தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை அழிக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!




திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த முனியப்பன் என்பவருக்கும், தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த சபரிநாத் என்பவருக்கும் மதுபோதையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனியப்பன் மார்க்கெட் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கையில் சிமெண்ட் கல்லோடு பின்தொடர்ந்த சபரிநாத் முனியப்பனை மடக்கி தகராறில் ஈடுபட்டபோது இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர்.


ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம்... விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு




இதில் சபரிநாத் கையில் இருந்த சிமெண்ட் கல் கீழே விழுந்து விடுகிறது. அந்த கல்லை எடுத்த முனியப்பன் சபரிநாத்தின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சபரிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கல்லால் தாக்கி விட்டு தப்பியோடிய முனியப்பன் காவல் நிலையம் சென்று தன்னை சபரிநாத் தாக்கி விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.


CM Stalin : தமிழகம் முழுவதும் சாலைகள் செம்மையா இருக்கனும்; ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!




செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்


இந்நிலையில் முனியப்பனை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடமிருந்து முனியப்பன் தப்பியோடினார். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தப்பியோடிய முனியப்பனை பிடித்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முனியப்பன் சபரிநாத்தை சிமெண்ட் கல்லால் தாக்கும் பதபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண