காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பரந்தூர்,கீழம்பி, தாமல்,ஒலி முகமது பேட்டை, வாலாஜாபாத், மாகரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.




காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலும் இருப்புப் பாதை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றது. மழை நின்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு திடீரென ஊட்டியை போன்று காஞ்சிபுரம் மாறியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து பனிப்பொழிவை ரசித்துச் சென்றனர்.




சென்னை--  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு,  விளக்கு ஒளிர விட்டு செல்லும் வாகனங்கள்


 


கடந்த சில நாட்களாக பருவ மழை காரணமாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் , குளிராக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் பணி பொழிவு இருந்து வருகிறது. 




இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய பிரதான சாலையில் பணிமோட்டமாக காணப்படுகிறது. அதிகளவு பணி பெய்து வரும் காரணத்தினால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக எதிரில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாததால் விளக்குகளை உயிரை விட்டு கொண்டு செல்கின்றனர். சமூக வலைதளத்திலும் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பது குறித்து, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.