Crime | நிர்வாண வீடியோவை பரவவிட்ட கடத்தல் கும்பல்.. உதவிக்கு வராத காவல்துறை.. பினாயிலை குடித்த எம்.பி.ஏ மாணவன்..!
துப்பாக்கி முனையில் எம்.பி.ஏ மாணவனை நிர்வாணமாக வீடியோ எடுத்ததால் சம்பந்தப்பட்ட மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime | நிர்வாண வீடியோவை பரவவிட்ட கடத்தல் கும்பல்.. உதவிக்கு வராத காவல்துறை.. பினாயிலை குடித்த எம்.பி.ஏ மாணவன்..! Delhi Crime news MBA Student Kidnapped, Unclothed Video Shot On Gunpoint Accused Arrested Crime | நிர்வாண வீடியோவை பரவவிட்ட கடத்தல் கும்பல்.. உதவிக்கு வராத காவல்துறை.. பினாயிலை குடித்த எம்.பி.ஏ மாணவன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/e2aa2cc2ce5ed568a346bcdaaf6f6a0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென் டெல்லியில் வசித்து வந்த மாணவர் ஒருவர் ஒரு பெண்ணுடன் நட்புடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, அந்த மாணவனை கடத்திய சிலர், துப்பாக்கி முனையில் மிரட்டி, நிர்வாணமாகவும், கஞ்சா, துப்பாக்கி ஆகியவற்றுடன் இருப்பது போன்றும் வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவன் 20 லட்சம் தரவில்லை என்றால், அவரை குற்றவழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் குடும்பம் 5 லட்சம் வரை கடத்தல் கும்பலுக்கு பணம் கொடுத்ததாகத் தெரிகிறது. இருப்பினும் மாணவனை கடத்தியவர்கள் சம்பந்தப்பட்ட மாணவனின் காலணி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நிர்வாண வீடியோவை பரவ செய்துள்ளனர்.
இது மட்டுமன்றி, பணத்தை தரவில்லை என்றால் மாணவனை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் மாணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆனால், காவலர் தரம்பால் புகார் கொடுத்த மாணவனையே மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன், பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மூத்த போலீஸ் அதிகாரியை சந்தித்த மாணவனின் பெற்றோர் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளித்த அந்த அதிகாரி, காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)