Crime : மும்பையில் 42 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை : குர்லா காவல்துறைக்குட்பட்ட பகுதியில் 42 வயதான ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து, பின்பு சிகரெட் துண்டை வைத்து அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகப் பகுதியில் எரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குர்லா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியதாவது, ”குர்லா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நவம்பர் 30-ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு எனது வீட்டின் கதவை தட்டினார். தண்ணீர் கேட்பதுபோல் நடித்து தனது வீட்டிற்குள் 3 பேர் நுழைந்தனர். சத்தம் போட்டதால் தன்னை கத்தியை காட்டி மிரட்டினர். தலைமுடியை இழுத்து தாக்கினர். பின்னர், தன்னை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததார்கள் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள், அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பக பகுதியில் சிகரெட் துண்டுகளை வைத்து எரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
போலீசாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். அதன்படி குர்லா பகுதியைச் சேர்ந்த வாசிம், முன்னா, பாலு என தெரியவந்தது. முன்விரோதத்தால் இதுபோன்ற செயலை அவர்கள் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பின்பு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடல் பாகங்களை 35 தூண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
சூது கவ்வும்... லூடோவுக்கு அடிமை: வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்!