ஜம்மு - காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் மாணவியர் அளித்த பாலியல் புகாரின்படி பேராசிரியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மாணவி ஒருவர், ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொமாய் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.


பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். உடனே பல்கலை பதிவாளர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


சந்தேகம் கேட்க சென்ற மாணவி:


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலையில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பாடத்தில் உள்ள சந்தேகத்தை கேட்பதற்காக தன் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.


இத்தகைய செயலால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 62 வயதான பேராசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஷ்மீரிலும் பாலியல் தொல்லை:


ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மாணவி ஒருவர், ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொமாய் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.


பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். உடனே பல்கலை பதிவாளர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Crime : மாமியாருக்கும், கணவருக்கும் சாப்பாட்டில் விஷம்.. பகீர் வாக்குமூலம் கொடுத்த பெண்.. நடுங்கவைக்கும் தகவல்கள்..


Children Rescued: சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் பாலியல் தொல்லை - 45 குழந்தைகள் மீட்பு..!