கடலூர்: பெண்ணாடம் அருகே துறையூரில் மோதல்; தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் - போலீசார் குவிப்பு
பெண்ணாடம் அருகே துறையூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்-தொடர்ந்து நீடிக்கும் பதட்டம் போலீசார் குவிப்பு.
Continues below advertisement

பதற்றம் நிலவிய இடத்தில் குவிந்த போலிசார்
கடலூர் மாவட்டம் துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, இவர் ஆண்டிமடம் அருகே ஐடிஐ படித்து வரும் நிலையில் அவருக்கும் கடலூர் மாவட்டம் முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஐ டி ஐ மாணவருக்கும் பேருந்து சீட்டில் அமர்வதில் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ராஜாவை முருகன்குடியை நாசின்ராஜ் என்ற மாணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துறையூர் கிராம மக்கள் நாசின் ராஜ் கிராமத்திற்கு சென்று ஆபாசமாக திட்டி உள்ளனர். இதனிடையே பேருந்தில் வந்த விஜயகுமார் என்பவரை துறையூர் பகுதி வாலிபர்கள் தாக்கியதால் இரு தரப்பினர் இடையே பிரச்சனையாக மாறி உள்ளது.
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவரை ஒரு கற்களை கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் லேசான காயம் அடைந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பதட்டம் காரணமாகவும் அசம்பாவிதங்களை தடுக்கவும் இரண்டாவது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அன்பழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 50 பேர் மீது பெண்ணிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
இந்நிலையில் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் வீடு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.