சூது என்றுமே வாழ்க்கைக்கு கேடுதான் விளைவிக்கும். அது தரையில் கட்டம் வரைந்து விளையாடும் தாயமாக இருந்தாலும் சரி இல்லை ஆன்லைனில் விளையாடும் ரம்மியாக இருந்தாலும் சரி. எல்லாமே கேடு தான்.


லூடோ கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டுகளில் ஒன்றாகும். கேம் அதன் வேர்களை 'பச்சிசி' என்ற பழைய கேமுடன் தொடர்புடையது. இது சற்று தந்திரமானது மற்றும் தற்போதைய லுடோ கேம் அதன் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பாகும். பகடைகளை உருட்டுவதும், காய்களை நகர்த்துவதும், அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில், லூடோ விளையாட்டின் முதன்மையான விளையாட்டு ஆகும். வழியைத் தடுப்பதும், மற்றவர்களின் ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லுடோவுக்கு உற்சாகத்தை சேர்க்கும் கூறுகள். ஆன்லைன் கேமிங் அரங்கில் குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அந்நியர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டு விளையாடக்கூடிய கேம் இதுவாகும்.


தாயத்தை இக்காலத்தில் லூடோ என்ற பெயரில் பலரும் விளையாடுகின்றனர். ஆன்லைனில் கூட இதை விளையாட வசதி வந்துவிட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் தாய விளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார். 


உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு உரிமையாளருடன் லூடோ விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இன்று விபரீதமாக முடிந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க விஷயம் வெளியே வந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி வீட்டு உரிமையாளருடன் பொழுதுபோக்கிற்காக லூடோ விளையாட ஆரம்பித்தார். ஆரம்பக்கட்டத்தில் அவ்வப்போது தான் விளையாடினர். பின்னர் பொழுதுக்கும் லூடோவே பிழைப்புபோல் ஆகியுள்ளது. மெல்ல மெல்ல பெட் வைத்து அதாவது பணம் வைத்து லூடோ விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பெட் வைத்து ஆட பணம் இல்லாமல் போனது. இதனால் அவர் தன்னைத்தானே தன் வீட்டு உரிமையாளரிடம் அடகுவைத்துள்ளார். அந்த விளையாட்டில் தோற்றுவிட அவர் வீட்டின் உரிமையாளருடனேயே வாழ ஆரம்பித்துவிட்டார். இது குறித்து கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.


இது குறித்து காவல் அதிகாரி சுபோத் கவுதம் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், நாங்கள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். அவரைத் தொடர்பு கொண்டதும் விசாரணைகளை ஆரம்பிப்போம் என்று கூறினார். இந்த விநோத புகாரால் காவல்நிலையமே சற்று அதிர்ந்துதான் போயுள்ளதாம்.