மேலும் அறிய

Coimbatore: யானை தந்தத்தை விற்க முயன்ற இருவர் கைது ; மேலும் இருவருக்கு வலைவீச்சு

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வனப்பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் பணிகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

யானை தந்தம் விற்க முயற்சி

இந்த நிலையில் கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் (40), நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகியோர் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட யானை தந்தத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் யானை தந்தத்தை வைத்திருந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இருவருக்கு வலைவீச்சு

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானை தந்தத்தை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்திருந்ததாகவும், அதனை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள விசாகன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து யானை தந்தம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது?, அதனை யாருக்கு விற்பனை செய்ய முயன்றனர் என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Embed widget