மேலும் அறிய

Pallavaram Murder Suicide : 80 லட்சம் கடன்.. பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்பம்.. வாரம்தோறும் வட்டி.. திடுக் தகவல்கள்..!

பல்லாவரம் அருகே நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் தெரிவித்தார்

பல்லாவரத்தில் பயங்கரம்
 
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (41) காயத்ரி (36) தம்பதி, இவர்களுக்கு நித்யஸ்ரீ (13), ஹரி கிருஷ்ணன் (8) என இரண்டு குழந்தைகள் இருந்தன. பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். காயத்ரி நாட்டு மருந்துக் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பிரகாஷுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அடிக்கடி மனைவியுடன் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றிரவு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு பிரகாஷ் மரம் அறுக்கும் ரம்பத்தால் தன் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Pallavaram Murder Suicide : 80 லட்சம் கடன்.. பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்பம்.. வாரம்தோறும் வட்டி.. திடுக் தகவல்கள்..!
 
இந்நிலையில் நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் நால்வரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முதற்கட்ட தகவலில் கடன் பிரச்சினை காரணமாகவே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
 
ஆன்லைனில் ரம்பம்
 
இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி செய்தியாளரிடம் கூறும்போது, "தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார். ஆங்கிலத்தில் உள்ள தற்கொலை குறிப்பில் தங்களை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை, நாங்களே எடுத்துகொண்ட முடிவு என எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.
 
Pallavaram Murder Suicide : 80 லட்சம் கடன்.. பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்பம்.. வாரம்தோறும் வட்டி.. திடுக் தகவல்கள்..!
கடந்த 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்ற மரம் அறுக்கும் எலெக்ட்ரிக் ரம்பம் மூலம் 3 பேரையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரகாஷ் மற்றும் காயத்ரியின் கைப்பேசியை ஆய்வு செய்து வருகிறோம். யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா அல்லது கடன் பிரச்சினை தானா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கிறோம்.
 
கடன் தொல்லை
 
கடன் வாங்கியதற்கான பத்திரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதவு திறந்திருந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் முதலில் உள்ளே சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரித்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 11 அல்லது 12 மணியளவில் நடந்திருக்கலாம். குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, பிரகாஷ் ரம்பத்தால் கழுத்தை அறுத்துள்ளார். இது தற்கொலை சம்பவமாக இருந்தாலும் கொலை என்ற நோக்கத்திலேயே விசாரணை மேற்கொள்வோம்" எனக் கூறினார்.
 
தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது
 
இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் உபயதுல்லா கூறுகையில், காலையில் நான் தூங்கி எழுந்தபோது பக்கத்து வீட்டில் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது. முதலில் நான் வேக்கம் கிளீனராக இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டேன். ஆனால் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்த நிலையில, உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் சத்தம் கேட்டது, இதனை தொடர்ந்து சென்று பார்த்தபோது, உள்ளே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவன் மனைவி இருவரும் உயிர் இழந்து கிடந்தது தெரியவந்தது.

Pallavaram Murder Suicide : 80 லட்சம் கடன்.. பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்பம்.. வாரம்தோறும் வட்டி.. திடுக் தகவல்கள்..!
மேலும் ரம்பம் உயிரிழந்த கணவர் அவரின் கழுத்தில் தொடர்ந்து அறுத்துக் கொண்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது அப்போதுதான் புரிந்தது, அது வேக்கம் கிளீனர் இல்லை ரம்பம் என தெரிந்து. இதனை அடுத்து பதறிய நான் உடனடியாக அலுவலகத்திற்கு காவல் செய்த போது போன் எடுக்கவில்லை. எங்கள் ஊர் கவுன்சிலருக்கு தகவல் தெரிவித்து கவுன்சிலர் மூலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் வந்த காவலர்கள் உடனடியாக, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார் அப்போதுதான் அந்த ரம்பம் ஆப் செய்யப்பட்டது. மிகக் கொடூரமான இந்த சம்பவத்தை பார்த்து மனம் வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.
 
திருமண நாளில் நடந்த விபரீதம் 
 
பிரகாஷ் மற்றும் காயத்ரி தம்பதிக்கு நேற்று முன்தினம் திருமண நாள் அதே குழந்தைகளுடன் கொண்டாடிய தம்பதி மெரினா கடற்கரைக்குச் சென்று உள்ளனர். இதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கும் சென்று வந்துள்ளனர். என அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

Pallavaram Murder Suicide : 80 லட்சம் கடன்.. பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்பம்.. வாரம்தோறும் வட்டி.. திடுக் தகவல்கள்..!
 
சுவரில் ஒட்டப்பட்ட கடிதம்
 
இந்த முடிவுக்கு யாரும் வற்புறுத்தவில்லை நாங்கள் எடுத்த முடிவு என ஆங்கிலத்தில் கடிதம் எழுதிவிட்டு சுவற்றில் ஒட்டி உள்ளனர். அதேபோல் மற்றொரு பிரதியை நோட்டிலும் எழுதி வைத்த பிறகு இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார் பிரகாஷ். இதனையடுத்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குரோம்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
80 லட்சம் கடன்
 
 வீடு கட்ட ரூ.27 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். மேலும் கார் வாங்கவும், மனைவியின் மருந்து கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை நடத்தவும் கடன் வாங்கி இருந்தார். பிரகாஷ் மொத்தம் 9 பேரிடம் ரூ.80 லட்சம் வரை கடன் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனை அவர் வார வட்டிக்கு வாங்கி இருந்தார் என தெரிய வருகிறது. ஆனால் பணத்தை பிரகாஷால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் பணம் கொடுத்த நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget