மெரினா பீச்சில் அரை நிர்வாணத்தில் பெண் திடீர் போராட்டம் - பரபரப்பான சாலை!
தன் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி அவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. யார் அவர்...
![மெரினா பீச்சில் அரை நிர்வாணத்தில் பெண் திடீர் போராட்டம் - பரபரப்பான சாலை! Chennai drunkan woman road roko near marina kannagi statue மெரினா பீச்சில் அரை நிர்வாணத்தில் பெண் திடீர் போராட்டம் - பரபரப்பான சாலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/754bcd6b2a72da496290c52148a4b714_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மெரினா பீச்சில் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மெரினா பீச்சில் பொதுமக்கள் அனுமதிபட்டதை தொடர்ந்து, அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகியுள்ளது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வருகை அதிகமாக உள்ளது. தற்போது பரபரப்பாக காணப்படும் மெரினா பீச்சில், நேற்றிரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நேற்றிரவு நடந்தேறியுள்ளது. கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணியளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீரென்று போராட்டம் நட்த்தினர். அவர் அரை நிர்வாண கோலத்தில் அங்கும் இங்குமாய் சுற்றிக்கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண் எதற்கு இந்த மாதிரி செய்கிறார் என்று மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனால், பீச் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது, கணவர் மற்றும் மனைவியை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது, அவர்களிடம் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில், தனது கணவரை சிலர் அடித்துவிட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நடந்துக்கொண்டதாக கூறினார். இந்த சம்பவங்களை செய்யும்போது அந்த பெண் மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால், சில மணி நேரம் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகள் படிக்க:
"நான்தான் ஜெயலலிதா பொண்ணு... ஆதாரம் இருக்கு" - பரபரப்பை கிளப்பியுள்ள சென்னைப் பெண்!#jayalalithaa https://t.co/CkxLaGbsvy
— ABP Nadu (@abpnadu) November 6, 2021
ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி-பணம் வராததால் கடப்பாரையை விட்டு சென்ற திருடன்https://t.co/4aTaVq9dgG#Thanjavur #ATM
— ABP Nadu (@abpnadu) November 6, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)