மேலும் அறிய

Chennai: நடத்தையில் சந்தேகம்... வீட்டிற்குள் சிசிடிவி வைத்த மாமியார்...! மூக்கை உடைத்த மருமகள்.. !

மாமியரின் மூக்கை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பின்பு அதிகமாக மாமியார்-மருமகள் சண்டை வருவது வழக்கம். அதில் ஒரு சில சண்டைகள் விபரீதமாக முடிகின்றன. அந்தவகையில் தற்போது மருகமகள் ஒருவர் மாமியாரின்  மூக்கை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையின் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(69). இவருடைய மனைவி கேத்தரின். இவர்களுக்கு அந்தோனி என்ற மகன் இருந்துள்ளார். அவருக்கு ரெஜினா சங்கீதா(38) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதன்பின்னர் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை வந்துள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. 

அந்த வீட்டில் தரை தளத்தில் அந்தோனி-ரெஜினா தம்பதி வசித்து வந்துள்ளனர். அதே வீட்டின் மாடியில் மாமனார்-மாமியார் வசித்து வந்துள்ளனர். தன்னுடைய மகன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு ரெஜினா சங்கீதாவின் நடத்தையில் மாமியார் கேத்தரினுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதை கண்டறிய மாமியார் கேத்தரின் ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி மருமகள் ரெஜினா சங்கீதா வீட்டில் இல்லாத போது அவருடைய அறையில் சிசிடிவி கேமராவை மாமியார் பொறுத்தியுள்ளார். 


Chennai: நடத்தையில் சந்தேகம்... வீட்டிற்குள் சிசிடிவி வைத்த மாமியார்...! மூக்கை உடைத்த மருமகள்.. !

அப்போது வெளியே சென்று வந்த மருமகள் ரெஜினா மாமியர் கேத்தரின் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய அனுமதில்லாமல் அறையில் எப்படி சிசிடிவி கேமரா வைக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் தன்னை வேவு பார்க்க இந்த கேமரா என்று கேள்விகளை கேட்டு மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார். இறுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. மாமியர் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் ஒருவரை தாக்கியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் மாமியர் கேத்தரினின் முகத்தில் மருமகள் ரெஜினா ஓங்கி குத்தியுள்ளார். அப்போது மாமியரின் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டியுள்ளது.

இதை கண்ட அவருடைய மகன் அந்தோனி இருவரின் சண்டையையும் விலக்கி விட்டு தன்னுடைய தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்ற பிறகு காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா வைத்தற்காக மாமியரின் மூக்கை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Embed widget