மேலும் அறிய

காய்கறி வெட்டும் கத்தியால் மாஸ்டரை வெட்டிய சிறுவர்கள்

அடிக்கடி மது பாட்டில் வாங்கி கொடுக்க கூறி , சிறுவர்களுக்கு தொல்லை கொடுத்த மாஸ்டரை கத்தியால் குத்திய சிறுவர்கள்

உணவகத்தில் பணிபுரிந்த சிறுவர்கள்

சென்னை ஆலந்துார்  உள்ளகரம் அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாஸ்டராக பணிபுரியும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த குமார் (வயது 54 ) என்பவருக்கு கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். போதைக்கு அடிமையான குமார் , சிறுவர்களிடம் மது வாங்கி தரும் படி அடிக்கடி வம்பிழுத்ததாக்கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் அசந்து துாங்கி கொண்டிருந்த மூன்று சிறுவர்களையும் போதையில் இருந்த குமார் எழுப்பியுள்ளார்.

காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தறுப்பு

இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் , காய்கறி வெட்டும் கத்தியால் குமாரின் கழுத்தை அறுத்து தப்பினர். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு15 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து , தலைமறைவான மூன்று சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி 1 கோடி ரூபாய் மோசடி. மோசடி செய்த குடும்பத்தினரை கைது செய்ய பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தம்பதி சாந்தகுமார் , செந்தில் அரசி. இவர்களின் மகன் விக்னேஸ்வரன்.

இவர்கள் வி.எஸ்.பி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் 2024 - ம் ஆண்டு தீபாவளி தங்க நகை சீட்டு நடத்தினர். அவர்கள் 500 பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த , 30க்கும் மேற்பட்டோர் மாதவரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், திரு.வி.க.நகர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் மாதவரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆன்லைன் டிரேடிங் , ஆசை வார்த்தை கூறி ரூ. 1 கோடியை ஏமாற்றிய மர்ம நபர்கள்

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 64) கடந்த ஜனவரி மாதம் , இவரது மொபைல் போன் எண்ணிற்கு, ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை ராமசாமி தொடர்பு கொண்டு பேசிய போது ஆன் லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக 1.04 கோடி ரூபாய் வரை அனுப்பியுள்ளார். இது குறித்து பிப்ரவரி மாதம் ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

வங்கி கணக்குகளை வைத்து விசாரித்த போலீசார், சென்னை பாரிமுனை பகுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கும்பா வெங்கடேசன், 30, மங்களூரைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் அல்தாப் உசைன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் கமிஷன் தொகைக்கு ஆசைப் பட்டு மோசடி நபர்களுக்கு தங்களின் வங்கி கணக்கை கொடுத்து உதவியது தெரிந்தது. இதையடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்பு செய்திகள்

" அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் டீமில் இடம் " கபடி பயிற்சியாளர் மீது புகார்
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த சட்டை!
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
வயிற்றுக்குள் 15 கோடி.. எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!
வயிற்றுக்குள் 15 கோடி! எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK MLA : ’அடேங்கப்பா ! தவெக-விலிருந்து எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செந்தில்பாலாஜி?
'தவெக எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செ.பாலாஜி?
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Kia Seltos: டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?
டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
Embed widget