மேலும் அறிய
Advertisement
பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது
’’எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்’’
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி. என்.டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (36). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு 10 மணிக்கு சவாரி முடித்து விட்டு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்த் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆனந்த் நேற்று எழும்பூர் பகுதி அருகே தனது ஆட்டோவை வேறு ஒரு நபர் ஓடிச் செல்வதை பார்த்தார். உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவை பிடித்து ஆட்டோ ஓட்டி வந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) என்பதும், இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்த குடோனுக்கு சீல் - 15 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்
சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த கலைமணி வயது 45 என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பெரும்பாலான கடைகளுக்கு குளிர் பானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள குளிர்பானங்கள் காலாவதி ஆகி இருப்பதாகவும் அவை விற்பனை செய்யப்படுவதாகவும் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து அவரது தலைமையில் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ஜெயகோபால் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார்; இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர் பானங்கள் காலாவதி ஆன நிலையில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிய வந்ததாகவும் , அதை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைத்து உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் தெரிவித்தார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion