மேலும் அறிய

NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர்.

டெல்லியில் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்கிலிருந்து பணத்தைத் திருட முயற்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய அல்லாது வேறொரு நாட்டில் குடிபெயர்ந்தக் குடிமக்கள் non resident Indian அதாவது என்.ஆர்.ஐ என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் பலர் தொழில் ரீதியாக இந்தியாவில் வங்கிக்கணக்குச் சேவைகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்திய வங்கித்துறையில் என்.ஆர்.ஐ சேமிப்புக் கணக்குகள் மற்றும் அதனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பல பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இவர்களது வங்கிக்கணக்கிலிருந்து வங்கி ஊழியர் உள்பட பலர் பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

NRI கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி:

சமீபத்தில் NRI வங்கிக்கணக்கில் இருந்து மட்டும் அதிகப்படியான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களையடுத்து இப்பிரச்சனைக்குறித்து வங்கி நிர்வாகம் கவனித்து வந்தது. பின்னர் தொழில்நுட்ப வாயிலான திருட்டு என்பதால் இதனை சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி நிர்வாகிகள் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில்  என்ஆர்ஐ வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் இருப்பதையடுத்து இதனை எப்படியாவது திருட வேண்டும் என நினைத்து ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர். இதனைப்பயன்டுத்தி பல முறை பணம் எடுக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியதில், என்ஆர்ஐ தொழிலதிபர் ஒருவரின் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் வரையில் பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது. மேலும் 32 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப குழுவின் ஆதரவோடு திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது.

  • NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!

இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.ஐ வங்கிப்பணத்தைத் திருட முயற்சி செய்தக் குற்றத்திற்காக டெல்லி,ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை வங்கி நிர்வாகிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். இதோடு அமெரிக்க மொபைல் எண்ணையும் இந்திய எண்ணிற்கு மாற்ற முயற்சிகள் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Embed widget