மேலும் அறிய

Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை - திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது

சேலத்தில் அதிமுக பகுதி செயலாளரை கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கைது.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் இருந்து அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம். இவர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி, கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து உடலை எடுப்பதற்கு அனுமதிக்காமல் உறவினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிமுகவினர் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் நூற்றுக்கு மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 மணி நேரத்திற்கு மேலாக உடல் கொலை செய்யப்பட்ட இடத்திலே உள்ளதால், உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சண்முகம்
கொலை செய்யப்பட்ட சண்முகம்

இந்த பேச்சு வார்த்தையில் அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான குவிந்துள்ளனர். குறிப்பாக சேலம் அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் வீட்டிற்கு செல்லும் சாலையில் லைட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. 4 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட சண்முகம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சண்முகம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் அதில் ஏதேனும் பிரச்சனையா? சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சண்முகத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் சிறு மோதல் நடந்துள்ளது. இது கொலைகான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினால் விசாரணை நடத்தி வந்தனர். 

Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை - திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது

இந்த நிலையில், சேலம் மாநகராட்சி 55-வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் கூலிப்படையை வைத்து சண்முகத்தை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. திமுகவை சேர்ந்த சதிஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும் இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சண்முகத்தை வெட்டி படுகொலை செய்த கூலிப்படையை கைது செய்வதோடு கூலிப்படையை ஏவிய சதீஷையும் கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்தனர். 

சண்முகம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை, திமுக கவுன்சிலர் தனலட்சுமி கணவர் சதீஷ் உட்பட  அருண்குமார், முருகன், பாபு, சீனிவாசன், பூபதி, கருப்பண்ணன் என்கிற சந்தோஷ், கௌதமன், நவீன் உள்ளிட்ட 9 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சதீஷ் மற்றும் சண்முகம் இடையே தகராறு ஏற்பட்டதால் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் திமுக கவுன்சிலர் தனலட்சுமிக்கும் கொலையில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் சண்முகத்தில் உடலை பெற்றுக் கொண்டனர். சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் பிரமுகர் வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget