மேலும் அறிய
Advertisement
நவம்பரில் ரிஜிஸ்டர்... தவணையில் கடன்... அம்மா பெயரில் கார்... 6 ஏர் பேக் இருந்தும் ஆக்சிடெண்ட் ஆன யாஷிகா கார்!
யாஷிகா ஆனந்த் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹாரியர் XZA ப்ளஸ் காரை கடன் முறையில் வாங்கியுள்ளார். பாதுகாப்பு உபகரணம் இருந்தும் உயிர்பலி வாங்க காரணம் இது தான்...!
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடிகை யாஷிகா ஆனந்த் வாகனம் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று யாஷிகா விபத்துக்குள்ளான கார் குறித்து சிறப்பு அம்சங்கள் குறித்து இனிக் காணலாம், யாஷிகா பயன்படுத்தி வந்த காரின் பெயர் ஹாரியர் XZA ப்ளஸ், இந்த கார் ஒரு டீசல் வாகனமாகும். இந்த கார் யாஷிகா ஆனந்த், அம்மா சோனல் ஆனந்த் அவர்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் மதிப்புள்ள இந்தக் காரை தவணை முறையில் வாங்கியுள்ளனர். இந்த காருக்கான இன்சுரன்ஸ் வருகின்ற 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வரை உள்ளது. இந்த காரை யாஷிகாவின் குடும்பம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வாங்கியுள்ளனர். இந்த கார் சென்னை சென்ட்ரல் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாரியர் XZA ப்ளஸ் கார்
டாட்டா நிறுவனத்தின் ஹாரியர் XZA ப்ளஸ் கார் ஆனது ஒரு சொகுசு கார் சென்னையில் இந்த காரின் ஷோரூம் விலை 20.15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இந்த மாதிரியான ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வாகனத்தில் வாகனத்தின் நிலைத்தன்மை என்பது மற்ற வாகனத்தை காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும்.
இந்த காரில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த காரில் நார்மல் மோட், ஈக்கோ மோட், ஸ்போர்ட்ஸ் மோட் ஆகிய மூன்று வகையான டிரைவிங் ஆப்ஷன்களில் உள்ளது. மேலும் இந்த வகையான ஆப்ஷன்கள் உள்ளதால் இடத்திற்கு ஏற்றதுபோல் வாகனத்தின், வேகத்தை கூட்டவும் முடியும், குறைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வாகனம் ஒரு லிட்டர் டீசலுக்கு பதினேழு கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும். அதேபோல் இந்த வாகனத்தில் மலை ஏறுவதற்கு என்று தனி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி சுலபமாக இந்த காரில் மலை ஏறி செல்லலாம். அதேபோல் இந்த காரில் 6 கதவுகள் உள்ளன, அதில் ஒன்று ரூப் கதவு. அதேபோல் இந்த வாகனத்தில் 6 ஏர்பேக்குகள். 6 ஏர்பேக்குகள் காரணத்தினால் விபத்து ஏற்பட்டாலும் பெருமளவு உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த வாகனத்தில் 6 ஏர்பேக்குகள் இருந்தும் சீட்பெல்ட் அணியாத காரணத்தினால் யாஷிகாவின் தோழி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டபோது யாஷிகா தனது காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வேகத்துடன் சென்ற காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக,யாஷிகா ஆனந்த் மீது உயிர்சேதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காரணத்தினால், யாஷிகா ஆனந்த் வழக்கு முடியும் வரை வாகனத்தை இயக்கக்கூடாது, என்ற காரணத்திற்காக மகாபலிபுரம் காவல்துறையினர் யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion