மேலும் அறிய

 குளிர்பானம் குடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்த சிறுவன்: திடீரென உயிரிழப்பு - நடந்தது என்ன?

விழுப்புரம்:  குளிர்பானம் குடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவன் திண்டிவனத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு. 

விழுப்புரம் :  ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் பிவிகே தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் மகன் அந்தோணி ஜான் லோஷன்(14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தாருடன் சொந்த ஊரான ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் சென்னைக்கு சென்றுள்ளனர். அப்போது மதுரை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து நின்றபோது அங்கிருந்த ஒரு கடையில் சிப்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட மாணவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். பின்னர் விக்கிரவாண்டி அருகே பேருந்து வந்த போது சிறுவனை எழுப்பியதில் எந்தவித சுயநினைவின்றி இருந்துள்ளார்.

மேலும் திண்டிவனம் பேருந்து நிறுத்தத்தில் சிறுவனை எழுப்பிய போது இரண்டு முறை பெருமூச்சு விட்டதாகவும், வேறு எந்தவித அசைவும் இல்லாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பேருந்தில் கதறி அழுதுள்ளனர். இதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதாக சர்வதேச ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பதாக நிபுணர்களும் குற்றம் சாட்டுகின்றனர். எதுவுமே அளவுக்கு மீறினால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் பெற்றோரும் கவனமுடன் இருக்க வேண்டியது கடமையாக உள்ளது. 

இதனிடையே கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்ததற்கு பிறகே சிறுவன் மயங்கியதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget