மேலும் அறிய

விக்கிரவாண்டி அருகே சோகம் ..! வெடித்து சிதறிய பாறை ; தாய் கண்ணெதிரே உயிரிழந்த மகள்

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே, பாறையை வெடி வைத்து தகர்த்த போது தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் டி.கொசப்பாளையம் கிராமத்தில் பாறைக்கு வெடிவைத்து தகர்க்கும் போது பாறையின் கற்கள் தாக்கியதில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அடுத்த டி.கோசப்பாளையம் கிராமத்திற்கு அருகிலுள்ள திருக்குணம் ஏரியிலிருந்து தண்ணீர் செல்லும் ஓடையை வேளாண்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓடையின் குறுக்கே பாறை ஒன்று இருந்ததால் அதனை வெடிவைத்து தகர்க்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், சங்கர் என்பவர் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மாலை பாறைக்கு வெடிவைத்து தகர்க்கும் போது 200 மீட்டர் தொலைவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஏழுமலை- முத்துலட்சுமி என்பவரின் 10 வயது மகள் காயத்ரியின் பின் தலையில் பாறை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கஞ்சனூர் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெடி வைக்க பயன்படுத்தப்பட்ட ட்ராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமலும், முன்னேற்பாடுகள் செய்யாமலும் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் இப்பணியில் ஈடுபட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் தாய் முத்துலட்சுமி கணவர் ஏழுமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகளாக டி.கொசபாளையத்தில் உள்ள தாய் நெல்லியம்மாள் வீட்டில் வசித்து வருவதும் அதே ஊரில் உயிரிழந்த சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget