மேலும் அறிய

தஞ்சாவூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது - மோட்டார் சைக்கிளும் பறிமுதல்

தற்போது சிறுவர்களும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சையில் சைக்கிளில் சென்ற ஓட்டல் ஊழியரை தள்ளிவிட்டுவிட்டு செல்போனை பறித்துச்சென்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருபவர் சண்முகராஜன் (46). இவர் நேற்று இரவு தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் வந்தனர்.

திடீரென அவர்கள், சைக்கிளில் சென்ற சண்முகராஜனை தள்ளி விட்டு, விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜன் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இருப்பினும் அந்த 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளிலில் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் ஓட்டல் ஊழியரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்ற அந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மங்களபுரத்தில் சென்ற போது ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர். உடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 2 பேரையும் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் அந்த 2 பேரையும் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அந்த 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்  சண்முகராஜனிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் இவர்கள்தான் என்று தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் சண்முகராஜனின் செல்போனும் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் செல்போனையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்திய போது அவர்கள், தஞ்சை அண்ணாநகர் 2-ம் தெருவை சேர்ந்த  18 வயது சிறுவன், தஞ்சை அன்புநகர் 1-ம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சாலையில் செல்போன் பேசிக் கொண்டு நடந்து செல்பவர்களிடம் இருந்து இதுபோன்று பறித்து செல்கின்றனர். இதை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் மது அருந்துகின்றனர். தற்போது சிறுவர்களும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Best 125cc Bikes in India: சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Embed widget