மேலும் அறிய

Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்

Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் ராஜ்குமார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தேடியது போல் நடித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி கொலை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் பெற்றோர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சிறுமி உடல்

இதனையடுத்து கோவை சூலூர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அப்போது போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் என்ற பகுதியில் சிறுமி ஒருவருவரின் உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, குளத்தில் வீசிவிட்டு சென்ற கொடூரம் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

கொலை செய்தது யார்.?

இந்த நிலையில் சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும், மேலும் சிறுமி விளையாடிய பகுதியில் உள்ள மற்ற சிறுவர்கள், மொபைல் டவர் மூலமாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில்,  சிறுமியை இந்த 2 பேர் தான் அழைத்து சென்றதாக சிறுமியோடு விளையாடிய மற்ற சிறுவர்கள் காட்டிக்கொடுத்தாக கூறப்படுகிறது.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி.?

இதனையடுத்து கோவை சிறுமி கொலை வழக்கில்  நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில்  வசித்து வரும் கார்த்தி (33) என்பவனையும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கார்திக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்ததும், சிறுமி காணமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து கார்த்திக்கும் சிறுமியை தேடியது போல நடித்து நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில் குற்றவாளி கார்த்திக்கின் கால் எலும்பு முறிந்துள்ளது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget