ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் 15 அன்று ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகள் சில விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அபராதம் விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஐசிஐசிஐ வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 1.8 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை வைப்பில் வைக்காததால் அபராதம் பெற்ற காரணத்திற்காக அதனை விதிமீறல் எனச் சுட்டிக்காட்டி ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து ஐசிஐசிஐ வங்கி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி மேற்கொண்ட மேற்பார்வைகளில் ரிசர்வ் வங்கி விதித்த விதிமுறைகளை மீறி சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை வைப்பில் வைக்காததால் அபராதம் வசூலித்ததது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஐசிஐசிஐ வங்கி இயங்குவது குறித்து பரிசீலித்த ரிசர்வ் வங்கி இறுதியாக பண அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார நிலை மீதான மேற்பார்வையை ரிசர்வ் வங்கி தரப்பில் கடந்த 2019ஆம் மார்ச் மாதம் 31-ஆம் தேதியன்றின் அடிப்படையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் இடர் மதிப்பீட்டு அறிக்கை, மேற்பார்வை அறிக்கை மற்றும் இவை தொடர்பான பிற ஆவணங்களும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட விதிமுறைகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கி மீது ரிசர்வ் வங்கி தரப்பில் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னிடம் கடன் பெற்ற நிறுவனங்களில் ஏற்கனவே மேற்கொண்ட முதலீடுகளை விட சுமார் 30 சதவிகிதம் அதிக முதலீடுகளை மேற்கொண்டிருப்பது முதலீடு என்பதால், பஞ்சாப் நேஷனல் வங்கி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்