FD Interest Rates:ரெப்போ ரேட் அதிகரிப்பு… எந்த வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்யலாம்? எங்கு வட்டி அதிகம்?

ரெப்போ ரேட் அதிகரிப்புக்குப் பிறகு எஸ்பிஐ உள்ளிட்ட முக்கிய வங்கிகள் ஏற்கனவே நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன, இது நிலையான வருமான முதலீட்டாளர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

Continues below advertisement

அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ஆகஸ்ட் மாதத்தில் பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.4% ஆக உயர்த்தியது. ரெப்போ வட்டி விகித உயர்வால் வங்கி கடன் மற்றும் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. ரெப்போ ரேட் அதிகரிப்புக்குப் பிறகு எஸ்பிஐ உள்ளிட்ட முக்கிய வங்கிகள் ஏற்கனவே நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. இது நிலையான வருமான முதலீட்டாளர்களுக்கு இனிப்பான செய்தியாகும். தற்போது ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கு அதிக வட்டி தேடுபவர்களுக்கான் தொகுப்புதான் இது.

Continues below advertisement

பாரத ஸ்டேட் வங்கி (SBI)

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), ஆகஸ்ட் 13, 2022 அன்று 2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது. 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை உள்ள FD-க்களில், மூத்த குடிமக்கள் இல்லாதவர்கள் இப்போது அதிகபட்சமாக 5.65% வட்டி விகிதத்தைப் பெறலாம், அதே சமயம் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 6.45 வட்டி விகிதத்தைப் பெறலாம்.

ஆக்சிஸ் வங்கி

ஆகஸ்ட் 11, 2022 அன்று ஆக்சிஸ் வங்கி 2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவித்தது. மாற்றத்தின் விளைவாக 17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு கால FDக்களுக்கு வட்டி விகிதத்தை வங்கி 5.60% இலிருந்து 6.05% ஆக உயர்த்தியது.

தொடர்புடைய செய்திகள்: Patriotic Songs Tamil: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!

கனரா வங்கி

கனரா வங்கி ஆகஸ்ட் 8, 2022 அன்று 2 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-க்களுக்கு 2.90% முதல் 5.75% வரை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 2.90% முதல் 6.25% வரை தருகிறது.

தொடர்புடைய செய்திகள்: Independence Day 2022 Wishes: 75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!

IndusInd வங்கி

IndusInd வங்கி ஆகஸ்ட் 12, 2022 அன்று 2 கோடிக்குக் குறைவான FD-க்களுக்கான வட்டி விகித உயர்வை அறிவித்தது. தற்போது, அந்த ​​வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள நிலையான வைப்புகளை பொது மக்களுக்கு 3.50% முதல் 6.75% வரையும், மூத்த குடிமக்களுக்கு 4.25% முதல் 7.50% வரை வட்டி விகிதம் வழங்குகிறது. 6 மாதங்கள் முதல் 61 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு பொது மக்கள் இப்போது அதிகபட்சமாக 6.75% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். மேலும் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 7.50% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்: 3 வருஷம் ஜெயில்தான்! தேசியக்கொடி ஏற்றும்முன் இதிலெல்லாம் கவனம் தேவை! முழு விவரம்!

கோட்டக் மஹிந்திரா வங்கி

ஆகஸ்ட் 10, 2022 அன்று, கோட்டக் மஹிந்திரா வங்கி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தது. வங்கி இப்போது ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள FD-க்களுக்கு, மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 2.50% முதல் 5.90% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.00% முதல் 6.40% வரையிலும் வட்டி விகிதங்கள் வழங்குகிறது.

யெஸ் பேங்க்

ஆகஸ்ட் 10, 2022 அன்று யெஸ் பேங்க் 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. யெஸ் பேங்க் இப்போது 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 3.25% முதல் 6.75% வரை வழங்கும். முதியவர்களுக்கு 3.75% முதல் 7.50% வரை வட்டி வழங்குகிறது. யெஸ் பேங்க் இப்போது மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை முதிர்வுக் காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதத்தை மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 6.75% மற்றும் வயதானவர்களுக்கு 7.50% வழங்குகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola